அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேகம் நாளை சிறப்பாக நடைபெற இருக்கிறது. இதில் நாடு முழுவதும் இருக்கும் முக்கிய பிரபலங்கள் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்க இருக்கின்றனர். மடாதிபதிகளுக்கும், சாமியர்களுக்கும் ராமர் கோயில் கும்பாபிஷேகம் அழைப்பிதழ் கொடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் நித்யானந்தாவுக்கும் ராமர் கோயில் கும்பாபிஷேக அழைப்பிதழ் கொடுக்கப்பட்டிருப்பதால், தானும் நேரடியாக கலந்து கொள்ள இருப்பதாக எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | ராமர் பெயரில் பூஜை செய்ய எந்த தடையும் விதிக்கவில்லை - அமைச்சர் சேகர் பாபு விளக்கம்


பாபர் மசூதி இடிப்பிற்கு பிறகு உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது. மிகப் பிரம்மாண்டமான முறையில் கட்டப்பட்டிருக்கும் இந்த கோயிலின் பணிகள் முழுமையாக கட்டி முடிப்பதற்கு இன்னும் 2 ஆண்டுகள் ஆகும். இருப்பினும், ராமர் கோயில் கும்பாபிஷேகம் முன்கூட்டியே நடத்த திட்டமிடப்பட்டு அதற்கான பணிகள் தடபுடலாக நடைபெற்று தயார் நிலையில் உள்ளது. பிரதமர் மோடி தமிழகம் வந்து ராமர் வணங்கிய ஸ்ரீரங்கம், ராமேஸ்வரம் உள்ளிட்ட வரலாற்று சிறப்பு வாய்ந்த கோயில்களுக்கு சென்றார். அங்கு சிறப்பு பூஜையில் பங்கேற்ற அவர், புனித தீர்த்தங்கள் மற்றும் புனித மண்ணை அயோத்தி ராமர் கோயிலுக்கு எடுத்துச் சென்றுள்ளார். 



தமிழ்நாட்டில் இருந்து ரஜினிகாந்த், தனுஷ் உள்ளிட்ட திரை பிரபலங்களும், அமிதாப்பச்சன், சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட முக்கிய பிரபலங்கள் ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் நேரடியாக பங்கேற்க இருக்கின்றனர். அந்தவகையில் சாமியார் நித்யானந்தாவும் பங்கேற்க இருப்பதாக அறிவித்துள்ளார். இது குறித்து எக்ஸ் பக்கத்தில் அவர் சார்பாக வெளியிட்டிருக்கும் பதிவில், "அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு இன்னும் சில நாட்களே உள்ளது. வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்ச்சியை தவரவிடாதீர்கள். பிரான பிரதிஷ்டை மூலம் ராமர் கோவிலின் கருவறைக்கு பாரம்பரிய முறைப்படி அழைக்கப்பட்டுள்ளார். அவர் ஒட்டு மொத்த உலகிற்கும் ஆசி வழங்க இருக்கிறார்."


"முறையாக அழைக்கப்பட்டதன் பேரில், இந்து மதத்தின் பகவான், ஸ்ரீ நித்யானந்தா இந்த பிரமான்ட நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்," என தெரிவிக்கப்பட்டுள்ளது. பாலியல் குற்றச்சாட்டின் பேரில் கடந்த 2010 ஆண்டு கைது செய்யப்பட்ட நித்யானந்தா, பிறகு ஜாமீன் பெற்று சிறையில் இருந்து வெளியே வந்தார். நித்யானந்தாவுக்கு எதிராக குற்றம்சாட்டிய ஓட்டுனர், 2020-ம் ஆண்டு நித்யானந்தா நாட்டை விட்டு வெளியேறிவிட்டதாக தெரிவித்தார். இந்த சூழலில் நித்யானந்தா, ராமர் கோயில் கும்பாபிஷேகத்தில் பங்கேற்க இருப்பது குறிப்பிடத்தக்கது. ராமர் கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சி நாளை (ஜனவரி 22) மதியம் நடைபெறுகிறது. பொது மக்கள் தரிசனத்திற்காக ஜனவரி 23-ம் தேதியில் இருந்து ராமர் கோவில் திறக்கப்படுகிறது.


மேலும் படிக்க | இந்துக்களின் எதிரி பாஜக, நீட் மற்றும் ஆளுநர் பதவி வேண்டாம்: திமுக இளைஞரணி தீர்மானம்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ