தமிழகம் (Tamil Nadu), புதுச்சேரியில் (Puducherry) நிவர் புயல் வங்கக்கடலில் உருவானது. வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிவர் புயலாக வலுப்பெற்றுள்ளது. சென்னைக்கு கிழக்கே சுமார் 470 கி.மீ. தொலைவில் நிவர் புயல் மையம் கொண்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

நிவர் புயல் இன்று மாலை தீவிர புயலாக வலுப்பெறும். மேலும் மாமல்லபுரம்-புதுச்சேரி இடையே நாளை மாலை தீவிர புயலாக நிவர் புயல் (Nivar Cylone) கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.



 


ALSO READ | Nivar Cyclone Update: புதுச்சேரியில் 144 தடை உத்தரவு, ரத்து செய்யப்பட்ட பஸ், ரயில் விவரம் இதோ


இதற்கிடையில் தென்மண்டல வானிலை மைய இயக்குனர் பாலசந்திரன் கூறியிருப்பதாவது:


நிவர் புயல் நாளை மாலை புதுச்சேரி அருகே தீவிர புயலாக கரையை கடக்கும். புயல் கரையை கடக்கும் நேரத்தில் புதுவை  (Puducherry), கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் அதிகனமழை பெய்யும். கடற்கரை பகுதிகளில் கடல் அலைகள் இயல்பை காட்டிலும் 2 மீட்டர் வரை கூடுதலாக உயர்ந்து கடல் கொந்தளிப்புடன் காணப்படும். இதனால் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம்.



நாளை புயல் கரையை கடக்கும்போது செங்கல்பட்டு, கடலூர், நாகை, விழுப்புரம், மயிலாடுதுறை, காரைக்கால் மாவட்டங்களில் 100 முதல் 110 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீச வாய்ப்பு உள்ளது. வரும் 27-ம் தேதி வரை தமிழகம் (Tamil Nadu), புதுச்சேரியில் மழை பெய்யும். நாகை, மயிலாடுதுறை, காரைக்கால் மாவட்டங்களில் இன்று அதிகனமழை பெய்யும் இவ்வாறு அவர் கூறினார். 


 


ALSO READ | பஸ்கள், ரயில்கள் நிறுத்தம்: நிவர் சூறாவளிக்கு எப்படி தயாராகிறது தமிழகம்


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR