கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டார் அருள்மிகு ஆதிகேசவபெருமாள் கோவிலில் இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார். அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆதிகேசவபெருமாள் கோவில் பல வருடங்களாக கும்பாபிஷேகம் நடைபெறாமல் இருந்தது. தற்போது தேவபிரச்சன்னத்தின் அடைப்படையில் கும்பாபிஷேகத்துக்கான தேதி குறிக்கப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது என்று தெரிவித்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இதற்கான நிதியை வழங்க அரசு தயாராக உள்ளது என்பதை குறிப்பிட்ட தமிழக கோயில்கள் (Tamil Nadu Temples) பராமரிப்புக்கு நிதி வழங்குவது போன்று கோவில் ஊழியர்களுக்கும் வழங்குகின்ற நிதியின் அளவை தமிழக அரசு 100% ஆக உயர்த்தியுள்ளது.


இதற்கான அறிவிப்பை முதல்வர் சட்ட மன்றத்தில் அறிவித்தார் என்றும், இதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். பெரிய கோவில்களில் நிதி சுமை இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. எனவே, அதிக வருவாய் உள்ள திருக்கோவில்களை இந்த கோவில்களுடன் இணைத்து அதிலிருந்து கிடைக்கும் உபரி நிதியை இந்த கோவிலுக்கு வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் தெரிவித்தார்.



கோயில்களில் தினசரி செலவு செய்வதற்கான நிதி குறைவாக இருந்தால், இதற்கான நிதியை துறை சார்பில் ஒதுக்குவதா அல்லது அரசு சார்பில் ஒதுக்குவதா என்று ஆய்வு செய்து, அது தொடர்பான அறிவிப்பை விரைவில் வெளியிட திட்டமிடப்பட்டிருப்பதாகவும் அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு (Tamil Nadu Minister Sekar Babu) தெரிவித்தார். 


அறநிலையத்துறை சார்பில் கல்லூரி தொடங்குவதற்கு நீதிமன்றம் தடை எதுவும் விதிக்கவில்லை. அந்தக் கல்லூரிகளில் நீதிமன்றம் ஆன்மீக வகுப்புகள் தொடங்க அறிவுறுத்தியுள்ளது. சென்னை கொளத்தூர், திருச்செந்தூர், திருச்சங்ககோடு , பழனி ஆகிய பகுதிகளில் கல்லூரி தொடங்க பல்கலைகழகத்திலிருந்து நேற்று அனுமதி பெற்றுள்ளோம். இந்த விஷயத்தில் நீதிமன்ற வழிகாட்டுதலின்படி, தமிழக அரசு செயல்படும் என்று அமைச்சர் தெரிவித்தார். 


மேலும், தற்போது தமிழ்கத்தில் அதிக அளவில்  அர்ச்சகர்கள், தவில், இசை, ஓதுவார் பயிற்சி பள்ளிகள் துவங்கப்பட்டுள்ளன என்பதை குறிப்பிட்ட அவர், இந்தப் படிப்புகளில் பட்டபடிப்பு படிப்பவர்களுக்கு உரிய பணி நியமனங்கள் வழங்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.


READ ALSO | நீலகிரி குடியிருப்பு பகுதிகளில் உலாவரும் வனவிலங்குகள்


 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR