தமிழகத்தில் பாஜக-வினை வீழ்த்த வேண்டிய அவசியம் இல்லை, பாஜக ஏற்கனவே வீழ்ந்து தான் உள்ளது என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கேரளாவில் வெள்ள பாதிப்பு பகுதிகளை பார்வையிட்ட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவர்கள் இன்று கோவை மார்கமாக டெல்லி திரும்புகின்றார். டெல்லி புறப்படும் ராகுல் காந்தியினை வழியனுப்ப தமிழக காங்கிரஸ் உறுப்பினர்கள் கேவை விரைந்துள்ளனர்.


இந்நிலையில் இன்று காலை விமான நிலையலத்தில் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்துப் பெசினார். அப்போது அவர் குறிப்பிட்டதாவது...



"நேற்றைய தினம் திமுக தலைவராக முக ஸ்டாலின் பதவியேற்றுக்கொண்டார். அவரது பதவியேற்பு உரை திமுக-காங்கிரஸ் கூட்டணி குறித்து எழுந்த கேள்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.


அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே நேரத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடக்க வாய்ப்பு இல்லை. 


கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி கவிந்துவிடும், பாஜக-வின் ஆட்சி மலரும் என பகல் கனவு காண்பது நிறைவேறாது.


அதிமுக-வில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனை பலர் பயன்படுத்திக்கொள்ள விரும்புகின்றனர்.


தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைப்பதற்கு வாய்ப்பில்லை. தமிழகத்தில் பாஜக-வினை வீழ்த்த வேண்டிய அவசியம் இல்லை, பாஜக ஏற்கனவே வீழ்ந்து தான் உள்ளது." என குறிப்பிட்டுள்ளார்!