இந்தியாவின் பிற பகுதிகளை விட வேகமாகவும் ஆபத்தானதாகவும் கொரோனா பரவி வரும் ஒரு நேரத்தில், கேரளா தொடர்ந்து புதிய தொற்றுநோய்கள் ஏதும் இல்லாத ஒரு அரிய சாதனையை பதிவு செய்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த மாதம் 300 வழக்குளை பதிவு செய்த கேரளா அரசு புதன்கிழமை செயல்பாட்டில் உள்ள வழக்கை மொத்தமாக 30-ஆக குறைத்தது. இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த கேரளா முதல்வர் பினராயி விஜயன் அவர்கள், மாநிலத்தில் இன்று புதிய வழக்குகள் பதிவாகவில்லை எனவும், மாநிலத்தில் செயல்பாட்டில் உள்ள வழக்கு 25 வழக்காக குறைந்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.


மொத்தம் பதிவு செய்யப்பட்ட 502 வழக்குகளில், இதுவரை 474 பேர் கேரளாவில் மீட்கப்பட்டுள்ளனர். ஒரு நாள் முன்பு 53-ஆக இருந்த மாநில ஹாட்ஸ்பாட்கள் தற்போது 33 ஹாட்ஸ்பாட்களாக குறைந்துள்ளது என்று சுகாதார அலுவலகம் தெரிவித்துள்ளது.



எவ்வாறாயினும், வியாழக்கிழமை தொடங்கி ஏராளமான தனிமைப்படுத்தப்பட்ட வெளிநாட்டினருடன் இந்த எண்ணிக்கை மாறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. வெளிநாடு வாழ் இந்தியர்களை நாடு கொண்டு வர அரசு முடிவு செய்துள்ள நிலையில்., வரும் நாட்களில் 64 விமானங்கள் மூலம் தாயகம் திரும்பவுள்ளனர். இதில் கிட்டத்தட்ட 5 லட்சம் பேர் கேரளாவிற்கு வர இருப்பது குறிப்பிடத்தக்கது.


மாநிலத்தில் இதுவரை 16,693 கண்காணிப்பு மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் 310 மருத்துவமனைகளும் அடக்கம் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.