என்னை நீக்க யாராலும் முடியாது: தினகரன் அதிரடி!
இன்று காலை, ஆ.தி.மு.க-வின் இரண்டு அணிகளையும் இணைப்பது குறித்து பேசுவதற்தைகள் அ.தி.மு.க தலைமையகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் ஆ.தி.மு.க துணைப் பொதுச்செயலாளராக தினகரன் நீடிக்க முடியாது என ஏற்க்கபட்ட தீர்மானம் செய்யப்பட்டது.
இந்த தீர்மானம் செல்லாது என தினகரன் அதிரடியாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது, தேர்தல் ஆணைய உத்தரவுபடி ஆ.தி.மு.க (அம்மா) என்று தான் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். எனவே இந்த தீர்மானம் செல்லாது எனவும்.
சசிகலாவால் நியமிக்கப்பட்ட திண்டுக்கல் சீனிவாசன் கட்சிப் பொறுப்பில் இருக்கும் போது, நான் துணைப் பொதுச்செயலாளராக இருபதற்கு தடை விதிக்க முடியாது எனவும் கூறியுள்ளார்.
கட்சி விரோத செயல்களில் ஈடுபடும் நிர்வாகிகளால் என்னை கட்சியில் இருந்து நீக்க இயலாது, தவிர விரோத செயல்களில் ஈடுபடும் தொண்டர்களை நீக்க எனக்கு அதிகாரம் உண்டு எனவும் தெரிவித்துள்ளார்.