துவங்கியது வேட்புமனு தாக்கல்; 26-ம் தேதி வரை மனு அளிக்கலாம்!
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டசபை இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தமிழகத்தில் இன்று தொடங்கியது. வரும் 26-ஆம் தேதி வரை வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம் என தெரவிக்கப்பட்டுள்ளது!
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தல் மற்றும் சட்டசபை இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தமிழகத்தில் இன்று தொடங்கியது. வரும் 26-ஆம் தேதி வரை வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம் என தெரவிக்கப்பட்டுள்ளது!
தமிழகத்தின் 39 பாராளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரி பாராளுமன்ற தொகுதிக்கும் அடுத்த மாதம் 18-ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. அதே சமயம் தமிழகத்தில் காலியாக இருக்கும் 18 சட்டசபை தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தப்படவுள்ளது.
இத்தேர்தலில் தமிழகத்தில் அதிமுக-பாஜக-பாமக கூட்டணி கட்சிகள் ஓர் அணியாகவும், திமுக-காங்கிரஸ் கூட்டணி கட்சிகள் மற்றொரு அணியாகவும் போட்டியிடுகின்றன. அமமுக, நாம் தமிழர், மக்கள் நீதி மய்யம் கட்சிகள் தனித்து போட்டியிடுகின்றன. முக்கிய கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து தேர்தல் பணிகளில் ஆர்வமாக ஈடுப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று காலை 10 மணிக்குத் தமிழகத்தில் துவங்கியது. சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணிவரை வேட்புமனுக்களை தாக்கல் செய்யலாம் எனவும், வரும் 26-ஆம் தேதி வரை வேட்பு மனுக்களை தாக்கல் செய்யலாம் எனவும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
முதலில் வருவோருக்கு முன்னுரிமை என்ற வகையில் வேட்புமனு பெறப்படுகிறது. வேட்புமனுவை பெறுவதற்கான விதிமுறைகள் அடங்கிய புத்தகங்கள், அந்தந்த அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டு உள்ளன.
வேட்புமனு தாக்கல் செய்ய வரும் நபருடன் நான்கு பேர் மட்டுமே அலுவலக அறைக்குள் வர வேண்டும். அதுபோல் அதிகபட்சம் அலுவலக வளாகத்துக்குள் 3 கார்கள் மட்டுமே வேட்பாளருடன் வரலாம். சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமையில் விடுமுறை என்பதால் வேட்புமனுக்கள் பெறப்படாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.