தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவு!
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்பு தேர்தலுக்கான வேட்புமனு நிறைவு பெற்றது.
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்பு தேர்தலுக்கான வேட்புமனு நிறைவு பெற்றது.
தமிழகத்தின்ன 27 மாவட்டங்களில் வரும் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் டிசம்பர் 9-ஆம் தேதி துவங்கப்பட்டது. வேட்புமனு தாக்கல் டிசம்பர் 16-ஆம் தேதியுடன் நிறைவு பெறும் என அறிவித்திருந்த நிலையில் தற்போது வேட்பு மனு தாக்கல் நிறைவு செய்யப்பட்டுள்ளது.
ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், மாவட்ட ஊராட்சி ஒன்றிய உறுப்பினர் ஆகிய 4 பிரிவுகளில் தேர்தல் நடத்தப்படும் தேர்தலில், இதில் ஊராட்சி தலைவர், ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய 2 பதவிகளுக்கு கட்சி சார்பின்றியும், ஒன்றிய வார்டு உறுப்பினர், மாவட்ட வார்டு உறுப்பினர் ஆகிய 2 பதவிகளுக்கு கட்சி அடிப்படையிலும் தேர்தல் நடத்தப்படுகிறது.
இந்த தேர்தலில் போட்டியிட் லட்சக்கணக்கானோர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
உச்சநீதிமன்ற உத்தரவுபடி தமிழகத்தின் 37 மாவட்டங்களில் சென்னை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப் பேட்டை, விழுப்புரம், கள்ளக் குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 10 மாவட்டங்களை தவிர மீதமுள்ள 27 மாவட்டங்களுக்கு உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படுகிறது.
இந்த 27 மாவட்டங்களிலும் முதல் கட்டமாக வருகிற 27-ஆம் தேதி 4,700 ஊராட்சி தலைவர் பதவி இடங்கள், 37,830 ஊராட்சி வார்டு உறுப்பினர் இடங்கள், 2,546 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் இடங்கள், 260 வார்டு உறுப்பினர் பதவி இடங்களுக்கு தேர்தல் நடத்தப்படுகிறது.
இரண்டாம் கட்ட தேர்தலில் (30-ஆம் தேதி நடைபெறும்) 4,924 கிராம ஊராட்சி தலைவர் பதவி இடங்கள், 38,916 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவி இடங்கள், 2,544 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவி இடங்கள், 255 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவி இடங்களுக்கு தேர்தல் நடைபெற உள்ளது.
இந்நிலையில் இந்த தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த அனைத்தும் அனைத்தும் இன்று பரிசீலனை செய்யப்படும் என தெரிகிறது. முழுமையாக பூர்த்தி செய்யப்படாத மற்றும் தகுதி இல்லாத வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்படும். அதன் பிறகு வேட்பாளர்கள் தங்களது மனுவை வாபஸ் பெற 2 நாட்கள் அவகாசம் வழங்கப்படும். வேட்பாளர்கள் தங்கள் வேட்பு மனுக்களை திரும்ப பெற இறுதி நாள் டிசம்பர் 19 என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்த அன்றைய தினம் மாலை வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.