ஹரியானா, மகாராஷ்டிரா தற்போது ஜார்க்கண்ட்; இதுதான் பாஜகவின் 2019-ன் நிலை: ப.சிதம்பரம்
ஜார்க்கண்ட் சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்கும் பெரும்பான்மையை பெற்றுள்ள நிலையில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கருத்து தெரிவித்துள்ளார்.
புது டெல்லி: ஜார்க்கண்ட் தேர்தலில் காங்கிரஸ்-ஜே.எம்.எம். கூட்டணி முன்னணி பெற்று வருகிறது. ஜார்க்கண்டிட் மாநிலத்தின் சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்கு எண்ணிக்கை இன்று (திங்கள்கிழமை) காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. மாநிலத்தில் ஆளும் பாஜக தனியாக போட்டியிட்டது. காங்கிரஸ் மற்றும் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்) கூட்டணி அமைத்து தேர்தலில் நின்றது. மொத்தம் 81 தொகுதிகளில் ஆட்சி அமைக்க 41 இடங்கள் வேண்டும் என்ற நிலையில், பெரும்பான்மையை விட அதிக இடங்களில் காங்கிரஸ் கூட்டணி முன்னிலை பெற்றுள்ளது.
தற்போதைய நிலவரப்படி பாஜக 26 இடங்களிலும், ஜேஎம்எம் + காங்கிரஸ் கூட்டணி 45 இடங்களிலும், மற்றவவை 10 இடங்களில் முன்னணியில் உள்ளனர். ஜார்க்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் முன்னிலை பெற்று வருவதை அடுத்து, அதுக்குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் முன்னால் நிதியமைச்சர் ப. சிதம்பரம் கருத்து பதிவிட்டுள்ளார். அவர் கூறியது,
ஹரியானாவில் பலவீனமடைந்தது,
மகாராஷ்டிராவில் அனுமதிக்கப்படவில்லை,
ஜார்க்கண்டில் ஆட்சியை இழந்தது.
அடுத்து 2019-ல் பாஜகவின் கதை.
இந்திய அரசியலமைப்பைக் காப்பாற்ற, பாஜக அல்லாத அனைத்து கட்சிகளும் தங்கள் பார்வையை உயர்த்த வேண்டும் மற்றும் காங்கிரஸுடன் ஓரணியாக இணைய வேண்டும்,
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.