தமிழகத்தில் இன்று முதல் வடகிழக்கு பருவமழை தொடங்குகிறது!!
அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழையோ பெய்யும்.
தமிழகத்தில் வட கிழக்கு பருவழை இன்று முதல் தொடங்க வாய்ப்புள்ளது. சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியது:-
தென்மேற்கு பருவமழை காலம் நேற்று முதிவடைந்தது. வடகிழக்கு திசையில் இருந்து காற்று வீச தொடங்கிவிட்டது.
இன்று, அல்லது நாளை தமிழகம் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளான தெற்கு கடலோர ஆந்திரா, ராயலசீமா, தெற்கு உள் கர்நாடகா மற்றும் கேரளாவில் வடகிழக்கு பருவமழை தொடங்க வாய்ப்பு உள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மழையோ பெய்யும்.
சென்னையை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மேலும் நாளை தமிழகத்தில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும்.
தமிழகம் மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளான தெற்கு கடலோர ஆந்திரா, ராயலசீமா, தெற்கு உள் கர்நாடகா மற்றும் கேரளாவில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை 89 சதவீதம் முதல் 111 சதவீதம் வரை அதிகம் பதிவாக வாய்ப்பு இருக்கிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனவே வெள்ள சேத தடுப்பு நவடிக்கைகளை அரசு தொடங்கியுள்ளது.