Tamilnadu Rain News : தென்மேற்கு பருவமழை விலகிய நிலையில் வடகிழக்கு பருவமழை ஆட்டத்தை தொடங்க இருக்கிறது. இன்னும் ஒரு சில நாட்களில் சீசன் தொடங்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், அதற்கு முன்னதாகவே சில மாவட்டங்களில் மழை பெய்யத் தொடங்கிவிட்டது. தென் கிழக்கு அரபிக் கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியே இதற்கு காரணம் என தெரிவித்திருக்கும் சென்னை வானிலை ஆய்வு மையம், தமிழ்நாட்டில் இன்றும் சில மாவட்டங்களில் கன மழை வெளுத்து வாங்கப்போகிறது என தெரிவித்துள்ளது. கடந்த 48 மணி நேரத்தில் அதிகபட்சமாக கோவையில் 12 செ.மீ மழை பதிவாகியுள்ளது. அடுத்த 48 மணி நேரத்தில் திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, நாமக்கல், திருச்சி மற்றும் கரூரில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரத்தின் சில பகுதிகளில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்யும். அடுத்த இரண்டு நாட்களுக்கு மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் மிதமானது முதல் கனமழை வரை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், அக்டோபர் 12 ஆம் தேதி தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதிகளில் புதிய சூறாவளி சுழற்சி உருவாகக்கூடும், இது மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழையைக் கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்படுவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. 


திண்டுக்கல், கரூர், நாமக்கல், திருச்சி, பெரம்பலூர், அரியலூர், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், தேனி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களுக்கும், கோவை, திருப்பூர் பகுதிகளில் வெள்ளிக்கிழமையும் கனமழை பெய்யும் என்பதால் முன்னெச்சரிக்கையாக மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. நீலகிரி, தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், மதுரை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களிலும் கனமழை பெய்யும்.


அக்டோபர் 14 ஆம் தேதிக்குப் பிறகு சென்னையில் கனமழை எதிர்பார்க்கப்படுகிறது. திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் உள்ளிட்ட பிற மாவட்டங்களிலும் கனமழை பெய்யும். சென்னையில் அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை முறையே 30-31 டிகிரி செல்சியஸாகவும், 25 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும். வடகிழக்கு பருவமழை தொடங்குவது அக்டோபர் மூன்றாவது வாரத்தில் இருக்கும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ