முரசொலி அலுவலக நில விவகாரம் தொடர்பாக அதன் நிர்வாக இயக்குனர் உதயநிதி ஸ்டாலினுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

திமுக அதிகாரபூர்வ நாளேடான முரசொலி, கோடம்பாக்கத்தில் அமைந்துள்ளது. இதன் நிர்வாக இயக்குனராக உதயநிதி ஸ்டாலின் இருந்து வருகிறார். இந்நிலையில் முரசொலி நில விவகாரம் தொடர்பாக அதன் நிர்வாக இயக்குநர் உதயநிதி ஸ்டாலினுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் இந்த விவகாரம் தொடர்பாக வரும் 19-ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக வேண்டும் எனவும் தேசிய பட்டியலினத்தவர் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.


முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் அமைந்துள்ளதாக பாஜக புகார் தெரிவித்து வரும் நிலையில் அக்கட்சி மாநில செயலாளர் சீனிவாசன் தேசிய பட்டியல் இனத்தவர் ஆணையத்திடம் புகார் மனு அளித்துள்ளார்.



இந்நிலையில்., முரசொலி அலுவலகம் அமைந்துள்ள இடம் தொடர்பாக அதன் நிர்வாக இயக்குநர் உதயநிதி ஸ்டாலினுக்கு தேசிய பட்டியல் இனத்தவர் ஆணையம் தற்போது நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 


பட்டியல் இனத்தவர் ஆணையத்தின் துணைத் தலைவர் முருகன் வரும் 19-ம் தேதி உதயநிதி ஸ்டாலினிடம் விசாரணை நடத்த உள்ளார். சாஸ்திரிபவனில் உள்ள அலுவலகத்தில் இந்த விசாரணை நடக்கும் என தெரிகிறது.