புதுச்சேரியில் கொரோனாவின் 2-வது அலை தினமும் புதிய உச்சத்தை தொட்டே அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கடந்த 4 வாரத்தில் கொரோனா பாதிப்பு 4 மடங்கு அதிகரித்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கொரோனாவை கட்டுப்படுத்த துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் (Tamilisai Soundararajan) பிறப்பித்த புதிய கட்டுப்பாடுகள் இன்று முதல் நடைமுறைக்கு வந்தன. அதன்படி தமிழகம் மற்றும் புதுச்சேரியில் (Puducherry) இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.


ALSO READ | புதுச்சேரியிலும் ஊரடங்கில் புதிய கட்டுப்பாடுகள்! முழு விவரம் இங்கே!


இந்நிலையில் கொரோனா (Coronavirus) பரவலை கட்டுப்படுத்தும் விதமாக புதுச்சேரியில் மதுக்கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 30 ஆம் தேதி வரை மதுக்கடைகளை மூட அம்மாநில கலால்துறை துணை ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.



புதுச்சேரி கொரோனா நிலவரம்
புதுச்சேரியில் நாளுக்கு நாள் கொரோனா (Coronavirus) நோய்த் தொற்று அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் புதிய உச்சமாக ஆயிரத்து 8 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் புதுச்சேரி மாநிலத்தில் 815 நபர்கள், காரைக்காலில் 101 நபர்கள், ஏனாமில் 40 நபர்கள், மாஹேவில் 52 நபர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது 7 ஆயிரத்து 288 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேபோல் இதுவரை 45 ஆயிரத்து 243 நபர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.


அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, கல்வி, பொழுதுபோக்கு, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR