தமிழகத்தில் மேலும் 477 பேருக்கு கொரோனா.... மொத்த எண்ணிக்கை 10,585 ஆக உயர்வு!
தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில் 939 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்!
தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு இன்று ஒரே நாளில் 939 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ்!
தமிழகத்தில் இன்று மேலும் 477 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 10,585 ஆக உயர்ந்துள்ளது, கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 74 ஆக உயர்வு.
இது குறித்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் கூறுகையில்.... தமிழகத்தில் இன்று மேலும் 477 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 384 பேரும், பிற நாட்டில் இருந்து வந்த 4 பேர், பிற மாநிலங்களை சேர்ந்த 89 பேர் என மொத்தம் 477 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 10,585 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் மட்டும் 332 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். இதனால் சென்னையில் மொத்த பாதிப்பு 6,271 ஆக உயர்ந்துள்ளது. ஈரோடில் கடந்த 31 நாட்களாக கொரோனா பாதிப்பு பதிவாகவில்லை. அதேபோல், திருப்பூரில் 15 நாள், கோவையில் 13 நாள், சேலம் மற்றும் திருவாரூரில் 10 நாள், நாமக்கல் மற்றும் நீலகிரியில் 7 நாள், கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்தூரில் 6 நாட்களாக புதிதாக யாருக்கும் கொரோனா பாதிப்பில்லை.
இந்தியாவிலேயே அதிகபட்சமாக 61 சோதனை மையங்கள் தமிழகத்தில் உள்ளன. அதன் மூலம் இதுவரை 3,13,639 மாதிரிகள் சோதனையிடபட்டுள்ளன. இன்று 3 பேர் உயிரிழந்துள்ளதால் மொத்த பலி எண்ணிக்கை 74 ஆனது. இன்று அதிகபட்சமாக 939 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். தற்போது 6970 சிகிச்சையில் உள்ளனர். உயர்தர சிகிச்சையினால் தொடர்ந்து 0.67 என்ற இறப்பு விகிதத்தையே தக்க வைத்து வருகிறோம்" என அவர் கூறினார்.