தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து இன்று ஒரே நாளில் 634 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகத்தில் இன்று மேலும் 639 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 11,224 ஆக உயர்ந்துள்ளது, கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 78 ஆக உயர்வு. 


இது குறித்து தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் கூறுகையில்.... தமிழகத்தில் இன்று மேலும் 639 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 558 பேரும், பிற மாநிலங்களில் இருந்து வந்த 81 பேர் என மொத்தம் 477 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 11,224  ஆக உயர்ந்துள்ளது. இன்று ஒரே நாளில் 4 பேர் உயிரிழந்துள்ளதால் பலி எண்ணிக்கை 78 ஆக உள்ளது. 634 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். மொத்தம் டிஸ்சார்ஜ் ஆனவர்கள் எண்ணிக்கை 4,172 ஆக உயர்ந்துள்ளது.


தற்போது 6,971 பேர் சிகிச்சையில் உள்ளனர். மொத்தமுள்ள 61 பரிசோதனை மையங்கள் மூலமாக இன்று மட்டும் 13,081 மாதிரிகள் சோதனையிடப்பட்டுள்ளன. இன்றைய பாதிப்புகளில் ஆண்கள் 398 பேர், பெண்கள் 241 பேர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.




இன்று அரியலூரில் 5 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அங்கு மொத்தம் 353 பேருக்கு கொரோனா உள்ளது. இன்று செங்கல்பட்டில் 28 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அங்கு மொத்தம் 498 பேருக்கு கொரோனா உள்ளது. கடலூரில் இன்று ஒருவருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அங்கு மொத்தம் 417 பேருக்கு கொரோனா உள்ளது.



கள்ளக்குறிச்சியில் இன்று 3 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அங்கு மொத்தம் 95 பேருக்கு கொரோனா உள்ளது. காஞ்சிபுரத்தில் இன்று 5 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அங்கு மொத்தம் 186 பேருக்கு கொரோனா உள்ளது. மதுரையில் இன்று 10 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அங்கு மொத்தம் 160 பேருக்கு கொரோனா உள்ளது. நாகப்பட்டினத்தில் இன்று ஒருவருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அங்கு மொத்தம் 50 பேருக்கு கொரோனா உள்ளது.