தமிழகத்தில் மேலும் 38 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்! 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தமிழகத்தில் இன்று மேலும் 38 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,242 பேர் ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து இன்று மாலை 6 மணி அளவில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய மாநில சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில்.... "தமிழகத்தில் இன்று மேலும் 38 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 21994 பேருக்கு இதுவரை தமிழகத்தில் கொரோனா பரிசோதனை செய்யபட்டுள்ளது. 


இந்நிலையில், 2739 பேருக்கு நேற்று ஒரே நாளில் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 38 பேருக்கு இன்று கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1242 ஆக அதிகரித்துள்ளது.. இன்று ஒரே நாளில் 37 பேர் குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 118 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் இன்று மட்டும் 2 பேர் உயிரிழந்துள்ளனர். இதை தொடர்ந்து கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்தது. 


மேலும், தமிழகத்தில் கொரோனா தொற்று இன்னும் சமூக பரவலாக மாறவில்லை. உடல் கவசம், முகக் கவசங்கள் தேவையான அளவு உள்ளது; தட்டுப்பாடு இல்லை" என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். 


தமிழகத்தில் உள்ள 22 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களாக மத்திய அரசு அறிவித்துள்ளது. அவற்றில், சென்னை, திருச்சி, கோவை, நெல்லை, ஈரோடு, வேலூர், திண்டுக்கல், விழுப்புரம், திருப்பூர், தேனி, நாமக்கல், செங்கல்பட்டு, மதுரை, தூத்துக்குடி, கரூர், விருதுநகர், கன்னியா குமரி, கடலூர், திருவள்ளூர், திருவாரூர், சேலம், நாகை ஆகிய மாவட்டங்கள் அடங்கும்.  


இந்தியாவில் கொரோனா தொற்று உடையவர்களின் எண்ணிக்கை 11,933 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 1344 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை கொரோனா வைரஸ் தோற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 392 ஆக பதிவாகியுள்ளது.