ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் இன்று நிருபர்களுக்கு அளித்தார் பேட்டியில் கூறியதாவது:-


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அதிமுக அணிகள் இணைப்பு குறித்த குழுக்கள் கலைக்கப்பட்ட பின்னர் பேச்சு வார்த்தை எப்படி நடைபெறும் ?
பேச்சு வார்த்தைக்குழு அமைக்கப்பட்ட பின்னர் தொடர்ந்து நாடகம் ஆடுகின்ற சூழலை தொடர்ச்சியாக செய்து கொண்டிருக்கின்றனர். 


நாங்களும் நாடகம் ஆட தயார் இல்லை. ஆக்கப்பூர்வமான எந்தவொரு யோசனையும், கருத்து பரிமாற்றம் செய்யவில்லை. இதனை கவனித்து தான் பேச்சுவார்த்தைக்கென அமைக்கப்பட்ட குழுவை கலைத்தோம்.


ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக பொதுச்செயலாளர் பதவிக்கு தகுதியானவர் மதுசூதனன் தான். முறைப்படியான கழக சட்டவிதிப்படி ஜெயலலிதாவுக்கு அடுத்த இடத்தில் இருக்கிறவர் அவர்தான்.


போயஸ்கார்டன் எங்களின் கோயில். அதனை நினைவிடமாக மாற்ற வேண்டும். ஜெயலலிதா மரணத்திற்கு பின்னர் அவரது சொத்துக்கள் யாருக்கு செல்ல வேண்டும் என்பது சட்ட முடிவின்படி நடவடிக்கை எடுப்போம். 


வரும் 14-ம் தேதி காலை சட்டசபை உறுப்பினர்கள் கூட்டத்தில் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து எடுத்துரைப்போம். இவ்வாறு அவர் கூறினார்.