அதிமுக-வின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் இன்று கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், சட்டமன்றக் கட்சி தலைவராக சசிகலா தேர்வு செய்யப்பட்டார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சட்டமன்றக் கட்சி தலைவராக சசிகலாவை தேர்வு செய்ய வேண்டும் என்ற தீர்மானத்தை முதலமைச்சரும் கட்சியின் பொருளாளருமான ஓ.பன்னீர்செல்வம் முன்மொழிந்தார். இந்த தீர்மானத்தை அனைத்து எம்.எல்.ஏ.க்களும் ஆதரித்ததையடுத்து சசிகலா ஒரு மனதாகத் தேர்வு செய்யப்பட்டார்.


தேர்வு செய்யப்பட்ட பின்னர் சசிகலா பேசியதாவது :-


தமிழக முதலமைச்சராக வேண்டும் என உங்கள் அனைவரின் கோரிக்கையை ஏற்கின்றேன். என்றும் மக்களுக்காக உழைப்பேன். 


ஜெயலிதாவின் கனவுகளை முழுமையாக நிறைவேற்றுவேன். ஜெயலலிதாவின் கொள்கைகளை கடைபிடித்து இந்த அரசு செயல்படும். 


கட்சியின் பொதுச்செயலாளராக பொறுப்பேற்க முதலில் என்னை முன்மொழிந்தவர் ஓ. பன்னீர்செல்வம். தற்போது நான் முதல்வராக பதவியேற்க வேண்டுமென ஓ. பன்னீர்செல்வம் வலியுறுத்தினார்.


ஜெயலலிதாவின் கொள்கையான மக்களுக்காகவே நான் என்ற தாரக மந்திரத்தின் படி இந்த அரசு மக்களுக்காகவே செயல்படும். 


இவ்வாறு பேசினார்.