சூடுபிடிக்கும் கர்நாடக களம்! அடுத்தடுத்து வேட்பாளரை அறிவிக்கும் ஓபிஎஸ்; குஷியில் இபிஎஸ்!
ADMK Candidates List: கர்நாடக சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் முடிவடையவுள்ள நிலையில், ஒவ்வொரு கட்சியும் வேட்பாளர் பட்டியலை அறிவித்து வருகிறது. அந்த வரிசையில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் அடுத்தடுத்து வேட்பாளர் குறித்து அறிவிப்பு வெளியாகி வருகிறது.
Karnataka Election 2023 Highlights: கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், மேலும் 2 தொகுதிகளுக்கான வேட்பாளர்களை முன்னாள் முதல்வரும், பதவி இழந்த அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வம் இன்று (ஏப்ரல் 20, வியாழக்கிழமை) அறிவித்தார். கர்நாடகா தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் இன்றுடன் நிறைவடைய உள்ள நிலையில், கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பாளரை அடுத்தடுத்து ஓ.பன்னீர்செல்வம் அறிவித்து வருகிறார்.
ஓபிஎஸ் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள்:
கோலார் மற்றும் காந்திநகர் தொகுதிகளுக்கான வேட்பாளர்களை ஓபிஎஸ் அறிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கோலார் தொகுதியில் ஆனந்தராஜும், காந்திநகர் தொகுதியில் கே.குமாரும் போட்டியிடுவார்கள் என தகவல்கள் வெளியாகி உள்ளன. முன்னதாக, புலகேசிநகர் தொகுதியில் ஓபிஎஸ் அணி சார்பில் நெடுஞ்செழியன் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது.
புலிகேசி நகர் தொகுதியில் அதிமுக சார்பில் அன்பரசன் போட்டியிடுவார் என எடப்பாடி பழனிசாமி நேற்று அறிவித்திருந்த நிலையில், அதே புலிகேசி நகர் தொகுதியில் ஓபிஎஸ் சார்பில் அம்மாநில மாணவர் அணி செயலாளர் நெடுஞ்செழியன் போட்டியிடுவார் என அறிவித்திருக்கிறார். அதனுடன் சேர்த்து மேலும் இரண்டு தொகுத்திக்கான வேட்பாளராகளை ஓபிஎஸ் தரப்பில் அறிவிக்கபட்டு உள்ளன.
மேலும் படிக்க: பழனிசாமி தரப்புக்கு இரட்டை இலை! அதிமுகவின் பொதுச்செயலாளராக அங்கீகரித்த தேர்தல் ஆணையம்
கர்நாடக தேர்தலில் களம் காணும் அதிமுக:
கர்நாடக 2023 சட்டமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணியில் 3 அல்லது 4 தொகுதிகளில் போட்டியிட அதிமுக கேட்டதாகவும், அதற்கு பாஜக மறுப்பு தெரிவித்ததாகவும் தகவல்கள் வெளியான நிலையில், நேற்றைய தினம் ஒரு தொகுதிக்கு இபிஎஸ் சார்பில் வேட்பாளர் அறிவிக்கப்பட்டார். இன்று ஓபிஎஸ் சார்பிலும் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு வருகின்றனர்.
எடப்பாடி பழனிசாமி தரப்புக்கு இரட்டை இலை:
மறுபக்கம் டெல்லி உயர்நீதிமன்றத்தின் 10 நாள் அவகாசத்தை அடுத்து, இன்று இந்திய தேர்தல் ஆணையம் சார்பில் வெளியிடப்பட்ட அறிவிப்பில், அதிமுக பொதுக் குழு தீர்மானங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டது. எனவே அதிமுக பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை அங்கீகரிப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்தது. மேலும் எடப்பாடி பழனிசாமிக்கு கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிட இரட்டை இலை சின்னமும் ஒதுக்கியது.
இந்திய தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்பால், ஓ பன்னீர்செல்வம்ம தரப்புக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ள நிலையில், அடுத்து அவர் என்ன முடிவெடுப்பார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஓபிஎஸ் தரப்பு வேட்பாளர் வாபஸ்?
சில மாதங்களுக்கு முன்பாக நடைபெற்ற ஈரோடு இடைத்தேர்தலிலும், இபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் தரப்பில் வேட்பாளர் நிறுத்தப்பட்டனர். ஆனால் இரட்டை இலை சின்னம் இபிஎஸ் தரப்பு கிடைத்ததால், ஓபிஎஸ் தரப்பு நிறுத்தப்பட்ட வேட்பாளர் வாபஸ் பெறப்பட்டது குறிப்பிடத்தக்கது.
கர்நாடகா மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், அந்த மாநிலத்துக்கான சட்டசபைத் தேர்தல் மே 10 ஆம் தேதி நடைபெற உள்ளது. மே 13-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
மேலும் படிக்க: சசிகலா, டிடிவி தினகரன், பாஜக... ஓபிஎஸ் போடும் தனி கணக்கு - திருச்சிக்கு வெயிட்டிங்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ