Tamil Nadu Political Update: சட்டசபை முடித்துவிட்டு சொந்த ஊரான தேனி மாவட்டம் பெரியகுளம் செல்வதற்கு சென்னையில் இருந்து ஏர் இந்தியா விமானம் மூலம் மதுரை விமான நிலையத்திற்கு வருகை முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வருகை தந்தார்.
நடந்து முடிந்த கதை
இந்நிலையில், மதுரை விமான நிலையத்தில் ஓபிஎஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,"திருச்சியில் வரும் ஏப். 24இல் அதிமுக சார்பில் எனது தலைமையில் முப்பெரும் விழா நடைபெற உள்ளது. லட்சக்கணக்கான தொண்டர்கள் பங்கேற்க உள்ளனர்.
மேலும் படிக்க | ரேஷன் கடைகளுக்கு முதலமைச்சர் உத்தரவு - அமைச்சர் துரைமுருகன் சொன்ன தகவல்
இதற்கு முன் எங்களிடம் இணைந்து இருந்த மூத்த நிர்வாகிகளுக்கும் அழைப்பு விடுக்கப்படும். சசிகலா, டிடிவி தினகரன் மற்றும் கூட்டணி கட்சியினர் உள்ளிட்ட அனைவருக்கும் அறிக்கையின் வாயிலாக அழைப்பு விடுக்கப்கடும் என தெரிவித்தார். ஸ்டெர்லைட் குறித்த கேள்விக்கு, நடந்து முடிந்த கதை எனக் கூறி சென்றார்.
ஓபிஎஸ்-ன் வருங்காலம்?
முன்னதாக, அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வான பின், அது ஓ.பன்னீர்செல்வம் தரப்பிற்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்பட்டது. தொடர்ந்து, நேற்று சென்னை வந்த பிரதமர் மோடியை தனியாக சந்திக்க ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோர் நேரம் கேட்டிருந்தனர். ஆனால், பிரதமர் இருவரையும் நேரில் தனியாக சந்திக்கவில்லை என கூறப்படுகிறது. இருப்பினும், பிரதமர் மோடியின் வரவேற்பு நிகழ்ச்சியிலும், வழியனுப்பும் நிகழ்ச்சியிலும் ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.
தற்போது, அதிமுக - பாஜக இடையே ஏற்கெனவே சச்சரவு நிகழ்ந்துவரும் இந்த சூழலில், ஓபிஎஸ் அதனை தனக்கு சாதகமாக்கிக்கொள்ள நினைப்பதாகவும் தகவல் கூறப்படுகின்றன. எனவே, வரும் ஏப். 24ஆம் தேதி நடைபெறும் திருச்சி மாநாடு ஓ. பன்னீர்செல்வத்தின் அரசியல் வருங்காலத்தை நிர்ணயிக்கக்கூடியதாக அமையும் எனவும் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக உள்ளது.
மேலும் படிக்க | 'வெற்றி பெற்றால் தான் அரசியல்வாதி' மதுரை மத்திய தொகுதியில் பிடிஆர் பரபரப்பு பேச்சு
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ