நீதி விசாரணை: ஓபிஎஸ் அணி உண்ணாவிரதப் போராட்டம்
ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழக முன்னாள் முதல்வர் ஓ. பன்னீ்ர்செல்வம் அணியினர் இன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
சென்னை: ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்பதை வலியுறுத்தி தமிழக முன்னாள் முதல்வர் ஓ. பன்னீ்ர்செல்வம் அணியினர் இன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
சசிகலா மற்றும் ஓ. பன்னீர்செல்வம் தலைமையில் அதிமுக இரண்டாக பிளவுற்று செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் திருவள்ளூர் மாவட்ட அதிமுக நிர்வாகிகளை சந்தித்த ஓ. பன்னீர்செல்வம், பின் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, அண்ணாதுரை, எம்.ஜி.ஆர் ஆகியோருக்கு அமெரிக்காவில் சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும், ஆனால் ஜெயலலிதாவிற்கு அவ்வாறு சிகிச்சை அளிக்க வற்புறுத்தியதை யாரும் ஏற்கவில்லை என்று குற்றம்சாட்டினார்.
ஜெயலலிதா மரணத்தில் இருக்கும் உண்மைகளை பொதுமக்கள் அறிய, உரிய நீதிவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், அதற்காக ஓ. பன்னீ்ர்செல்வம் அணியினர் இன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.
இதனிடையே, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த 11 எம்.பி.க்கள் ஜெயலலிதாவின் மரணம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தி ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியிடம் கடந்த வாரம் மனு அளித்தனர்.
ஜெயலலிதாவின் மரணத்தில் உள்ள மர்மத்தை வெளி கொண்டு வர நீதி விசாரணை வேண்டும் என்பதை வலியுறுத்தி மகளிர் தினமான இன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட உள்ளனர்.
சென்னை மற்றும் மாவட்ட தலைநகரங்கள் என மொத்தம் 32 இடங்களில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறுகிறது. இதற்கான அனுமதியை உரிய முறையில் போலீசாரிடம் ஓ. பன்னீர்செல்வம் அணியினர் பெற்றுள்ளனர்.