பிரதமர் நரேந்திர மோடியை இன்று மாலை சந்தித்துப் பேச இருக்கிறார் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

திடிரென டெல்லி சென்ற ஓ.பன்னீர்செல்வம் இன்று மாலை பிரதமர் மோடியைச் சந்திக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. அவருடன் எம்.பி. மைத்ரேயன், முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி, மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோரும் டெல்லி சென்றுள்ளனர். 


ஜெயலலிதாவின் மரணத்துக்குப் பின் அதிமுகவில் ஏற்பட்ட குழப்பம், தமிழக அரசியலிலும் நிலவும் மாற்றம் என தமிழகத்தில் ஏதாவது ஒரு செய்தி வந்துக்கொண்டு இருக்கின்றன. 


மேலும் அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணியை சேர்ந்த ஓ. பன்னீர்செல்வம் தரப்பினர் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் மர்மம் இருப்பதாகக் கூறி நீதி விசாரணை வேண்டும், சசிகலா குடும்பத்தை முற்றிலுமாக அதிமுக-வில் இருந்து ஓரம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கைகளுடன் அணிகள் இணைப்பு பேச்சுவார்த்தைக்கு தயார் என அறிவித்தனர். ஆனால், அதுவும் தற்போது இழுபறியில் சென்று கொண்டிருக்கிறது.


இந்நிலையில் இன்று மாலை 5 மணி அளவில், பிரதமர் மோடியைச் சந்திக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதேபோல், அனில் மாதவ் தவேவின் இறுதிச் சடங்கில் அவர் கலந்து கொள்கிறார்.


தற்போதைய அரசியல் சூழலில், பன்னீர்செல்வத்தின் இந்தப் பயணம் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.