AIADMK Party Flag & Symbol, Madras High Court: அதிமுக கட்சி பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை  சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.  அதிமுக-விலிருந்து இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், கட்சியின் பெயர், கொடி, சின்னம், லெட்டர் பேட் ஆகியவற்றை தொடர்ந்து பயன்படுத்த தடை விதிக்க கோரி அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற தனி நீதிபதி, கட்சியின் பெயர், சின்னம், கொடி, லெட்டர் பேட் ஆகியவற்றை பயன்படுத்த பன்னீர்செல்வத்துக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | சிதம்பரம் கனகசபை மீது வழிபாடு நடத்த போராடுவீர்களா அண்ணாமலை?


இந்த உத்தரவை எதிர்த்து பன்னீர்செல்வம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதிகள் மகாதேவன் மற்றும் முகமது சபீக் அமர்வு விசாரித்தது. அப்போது, ஒ.பன்னீர்செல்வம் தரப்பில், கட்சியின் கொடி, சின்னம் பயன்படுத்த கூடாது என்ற தனி நீதிபதியின் இடைக்கால உத்தரவு, வழக்கின் இறுதி தீர்ப்புக்கு சமமானது என்றும், இடைக்கால உத்தரவின் அடிப்படையில் தடை விதிக்க முடியாது என்பதால் தனி நீதிபதி உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என வாதிடப்பட்டது.   அதிமுக-வில் மூன்று கொடிகள் உள்ள நிலையில், எந்த கொடியை பயன்படுத்த தடை கோருகிறார் என எடப்பாடி பழனிசாமி  விளக்கவில்லை எனவும், அண்ணா விரல் காட்டுவது தான் உண்மையான கொடி என்பதால் அதை பன்னீர்செல்வம் பயன்படுத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.


லட்சக்கணக்கான தொண்டர்கள் தனக்கு ஆதரவாக  உள்ள நிலையில், அவர்களுக்கும் எப்படி தடை விதிக்க முடியுமெனவும், ஆதரவாளர்களின் கைகளில் கட்சி சின்னமான இரட்டை இலையை பச்சை குத்தி உள்ள நிலையில், தனி நீதிபதி உத்தரவால் அதை நீக்க முடியுமா எனவும் பன்னீர்செல்வம் தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டது.  கட்சியில் இருந்து நீக்கப்பட்டது செல்லுமா செல்லாதா என்பது குறித்து பிரதான சிவில் வழக்கில் தான் முடிவெடுக்க முடியும் என்றும், பிரதான வழக்கு இன்னும் நிலுவையில் உள்ள நிலையில், தடை உத்தரவு செல்லத்தக்கதல்ல என்றும் வாதிடப்பட்டது.  எடப்பாடி பழனிசாமி தரப்பில், பன்னீர்செல்வத்தை கட்சியில் இருந்து நீக்கியதை இரு நீதிபதிகள் அமர்வு உறுதி செய்துள்ளதாகவும்,  கட்சியில் உறுப்பினராக இல்லாத போது அதன் பெயர், கொடி, சின்னம் ஆகியவற்றை எப்படி பயன்படுத்த முடியும் என எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டது. 


இன்னும் ஒருங்கிணைப்பாளர் என கூறும் பன்னீர்செல்வத்துக்கு லட்சக்கணக்கான ஆதரவாளர்கள் இல்லை என்றும், அப்படி இருப்பதாக கூறினாலும் முகம் தெரியாத அவர்களை கருத்தில் கொள்ள வேண்டியதில்லை என்பதால், அவர்கள் யாரையும் கட்சியில் இருந்து நீக்கி அறிவிக்கவில்லை என்றும் விளக்கம் அளிக்கப்பட்டது. இடைக்கால தடை உத்தரவை எதிர்த்த இந்த மேல்முறையீடு விசாரணைக்கு உகந்ததல்ல என்றும்,  இடைக்காலத் தடை உத்தரவு இறுதியானதல்ல, 30 ஆண்டுகளாக கட்சியில் உள்ள பன்னீர்செல்வம்,  இன்னும் எக்ஸ் சமூக வலைதளத்தில் ஒருங்கிணைப்பாளர் என்றே குறிப்பிட்டுள்ளதாகவும், ஒருங்கிணைப்பாளர் என்று கூறியே அறிக்கை வெளியிடுவதாகவும் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் குற்றம்சாட்டப்பட்டது.


பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிச்சாமியை தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளை கலைத்ததையும் தேர்தல் ஆணையம் அங்கீகரித்துள்ளது. அதிமுக கட்சியின் சொத்துகளான கட்சி கொடி, லெட்டர் பேடு ஆகியவை யாருக்கும் சொந்தமானதல்ல என்பதால், கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பன்னீர்செல்வம் தாக்கல் செய்த இந்த மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதிடப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும்  கேட்டறிந்த நீதிபதிகள், பன்னீர்செல்வத்தின் மேல்முறையீட்டு மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல்,   தள்ளிவைத்திருந்தனர்.  இன்று இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள், பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். மேலும், இந்த விவகாரத்தில் நிவாரணம் கோரி தனி நீதிபதி முன் உரிய மனுவை தாக்கல் செய்ய பன்னீர்செல்வம் தரப்புக்கு அனுமதியளித்த நீதிபதிகள், அந்த மனுவை சட்டப்படி பரிசீலித்து தகுந்த உத்தரவை பிறப்பிக்க தனி நீதிபதிக்கு உத்தரவிட்டனர்.


மேலும் படிக்க | அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் மனு: அமலாக்கத்துறை எதிர்ப்பு - ஜனவரி 12 கிளைமேக்ஸ்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ