ஓகி புயலால் தமிழக கடலோரம் குறிப்பாக கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் கேரள கடலோர பகுதிகள் பெரும் சேதம் அடைந்ததுள்ளது. கடலுக்கு மீன் பிடிக்க சென்ற ஏராளமான மீனவர்கள் கரைக்கு இதுவரை திரும்பவே இல்லை. பலர் புயலில் சிக்கி உயிரிழந்தனர். ஓகி புயலால் விவசாய நிலங்கள் பெரும் அளவுக்கு பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த 12-ம் தேதி ஓகி புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்தை தமிழக முதல்வர் பார்வையிட்டார். ஓகி புயலால் இறந்த மீனவ குடும்பத்திற்கு நிவாரண நிதி வழங்கினார். அதேபோல கடந்த 19-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி ஓகி புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்தை பார்வையிட்டார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பின்னர் தமிழக முதல்வர் ஓகி புயலால் ஏற்பட்ட பாதிப்பை சமாளிக்க நிவாரணமாக 4,047 கோடி ரூபாய் மத்திய அரசு ஒதுக்க வேண்டும் என கோரினார்.


இந்நிலையில், ஓகி புயல் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்தை பார்வையிட மத்தியக் குழு இன்று தமிழகம் வந்துள்ளது. இந்த குழு நாளை ஓகி புயலால் பாதிக்கப்பட்ட கன்னியாகுமரி மாவட்டத்தை பார்வையிடுவார்கள். 


தேசிய பேரிடர் நிவாரண நிதியில் இருந்து தமிழகத்திற்கு இடைக்கால நிவாரண நிதியாக ரூ.133 கோடியை வழங்குவதாக மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது.