ஆபாசமாக பேசி வீடியோ வெளியிட்ட வழக்கு: பப்ஜி மதனின் ஜாமீன் மனு தள்ளுபடி
ஆபாசமாக பேசி யூடியூப்பில் வீடியோ வெளியிட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட பப்ஜி மதனின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
பப்ஜி உள்ளிட்ட ஆன்லைன் விளையாட்டுகளை யூடியூப் சேனல் மூலம் ஆபாசமாக பேசிக்கொண்டே விளையாடியதுடன், ஆபாச யூடியூப் தளம் நடத்தியதாக பப்ஜி மதன் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகம், சைபர் கிரைம் பிரிவிலும், சென்னை மத்திய குற்றப்பிரிவிலும் புகார்கள் குவிந்தன.
இந்த புகார்களின் அடிப்படையில் யூடியூபர் மதன் (Youtuber Madan) மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீஸார், பெண்களை ஆபாசமாக சித்தரித்து பேசுதல், அவதூறாக பேசுதல், தகவல் தொழில் நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல், தடை செய்யப்பட்ட செயலியை பயன்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளின் வழக்கு பதிவு செய்தனர். அதன்படி விசாரணைக்கு ஆஜராகும்படி சம்மன் அனுப்பிய நிலையில் தலைமறைவாகி இருந்த மதன் முன் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனு தள்ளுபடியானது.
ALSO READ | பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக டிக் டாக் "ரவுடிபேபி" சூர்யா கைது!
இதற்கிடையில் பப்ஜி மதன் மனைவியை போலீஸார் கைது செய்தனர். மேலும் கடந்த ஜூன் 18 ஆம் தேதி தருமபுரியில் மதனை போலீஸார் கைது செய்தனர்.
இந்நிலையில் ஜாமீன் கோரி மதன் தாக்கல் செய்த வழக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி செல்வக்குமார் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, விசாரணை முழுமையாக முடிவடையவில்லை. பல நபர்களிடம் மதன் மோசடி செய்துள்ளார். அதனை முழுமையாக விசாரிக்க வேண்டும். எனவே மதனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்யப்படும் என்று அவர் கூறி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ALSO READ | ஜி.பி முத்து, ரவுடி பேபி சூர்யா, திவ்யா உள்ளிட்ட 8 பேருக்கு கிடுக்கிப்பிடி
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR