ஓகி புயல் குறித்து எதிர்க்கட்சி தலைவர் மு.கஸ்டாலின் கேள்விகளுக்கு சட்டசபையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அரசு எடுத்த நடவடிக்கைகள் குறித்து பதில் அளித்தார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஓகி புயலால் காணாமல்போன மீனவர்களை கண்டுபிடிக்க சரியான நடவடிக்கை இல்லை என எதிர்க்கட்சி தலைவர் மு.கஸ்டாலின் சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பினார்.


மேலும் அவர்,மத்திய அரசிடம் தமிழக அரசு கேட்ட நிவாரணம் என்ன ஆனது எனவும் ஓகி புயல் பாதிப்பை தேசியபேரிடராக அறிவிக்க ஆளுநர் உரையில் ஏன் கேட்கவில்லை என்றார்.


அதற்கு பதில் அளித்து பேசிய முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி;-


ஒகி புயல் பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க கோரி பிரதமரிடம் நேரில் வலியுறுத்தினேன். ஒகி புயல், வடகிழக்கு பருவமழை பாதிப்பு குறித்து பிரதமரிடம் விரிவான மனு அளிக்கப்பட்டு உள்ளது.


தேசிய பேரிடர் நிவாரண நிதியை உயர்த்தி வழங்க வலியுறுத்தப்பட்டு உள்ளது.


ஒகி புயலால் மாயமான 3,522 மீனவர்கள் பத்திரமாக கரை திரும்பியுள்ளனர்.வானிலை விவரங்களை மீனவர்களுக்கு தமிழில் தெரிவிக்க பிரத்யேக செயற்கைக்கோள் அனுப்ப பிரதமரிடம் வலியுறுத்தப்பட்டது.


திசை மாறி பிற மாநிலங்களுக்கு சென்ற மீனவர்களை, 5 ஐஏஎஸ் அதிகாரிகள் மூலம் டீசல், உணவுப்படி வழங்கப்பட்டு அழைத்து வரப்பட்டனர்.  11 ஐஏஎஸ் அதிகாரிகள் மற்றும் மூத்த அதிகாரிகள் மீட்பு பணிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.20 லட்சம் மற்றும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கப்பட்டது. முதல்கட்டமாக புயல் நிவாரணம் ரூ.133 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது என்றார்.