ஓகி புயலில் சிக்கி 194 மீனவர்களை காணவில்லை -அமைச்சர் ஜெயக்குமார்!!
ஒகி புயலில் சிக்கி காணாமல்போன குமரி மாவட்டத்தைச் சேர்ந்த 25 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களின் சடலங்கள் அடையாளம் காணப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
ஒகி புயலில் சிக்கி காணாமல்போன குமரி மாவட்டத்தைச் சேர்ந்த 25 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களின் சடலங்கள் அடையாளம் காணப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து சென்னை விமான நிலையத்தில் இன்று காலை செய்தியாளகளிடம் பேசிய அமைச்சர் ஜெயகுமார் ,ஒக்கி புயலால் காணாமல்போன மீனவர்கள் 15 நாட்களுக்குள் திரும்பாவிட்டால் அவர்கள் உயிரிழந்தவர்களாக கருதப்படுவார்கள் என்ற அவர், ஓகி புயலால் மொத்தம் 194 மீனவர்கள் காணாமல் போயுள்ளதாகவும் 25 மீனவர்கள் உயிரிழந்திருப்பதாகவும் கூறினார்.
மேலும் ஓகி புயலால் காணாமல் போன 194 மீனவர்கள் தொடர்பாக அரசிதழில் அறிவிப்பு வெளியிடப்படும் எனவும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர்,ஜெயலலிதா எப்போது இறந்தார் என்பது குறித்து குழப்பத்தை ஏற்படுத்தும் வகையில் தகவல் தெரிவித்துள்ள திவாகரனை கைது செய்ய வேண்டும் என்று அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தியுள்ளார்.
ஜெயலலிதா கடந்தச 2016-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ஆம் தேதி உடல்நல பாதிப்பு காரணமாக சென்னை அப்பல்லோவில் அனுமதிக்கப்பட்டார். 75 நாட்கள் சிகிச்சைக்கு பின்னர் டிசம்பர் 4-ஆம் தேதி அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.
இதைத் தொடர்ந்து ஜெயலலிதா டிசம்பர் 5-ஆம் தேதி இறந்துவிட்டதாக அப்பல்லோ நிர்வாகம் அறிவித்தது. எம்ஜிஆர் பிறந்த நாள் விழாவையொட்டி திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் நடந்த பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய சசிகலாவின் சகோதரர் திவாகரன் ஜெயலலிதா டிசம்பர் 5 ஆம் தேதி இறக்கவில்லை என்றும் 4 ஆம் தேதி மாலை 5.15 மணிக்கே இறந்து விட்டார் என்று பேசி அதிர்ச்சி அடையச் செய்தார்.
ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டிக்கும் நிலையில் டி.டி.வி.தினகரனும், திவாகரனும் தங்களது இஷ்டப்படி செயல்பட்டு வருகிறார்கள் என குற்றம்சாட்டினார்.
ஜெயலலிதாவின் மரணத்தை வைத்து தினகரனும், திவாகரனும் அரசியல் செய்கிறார்கள் என்றும் . அவர்களை கைது செய்து, விசாரணை கமிஷன் விசாரித்தால் உண்மைகள் வெளிவரலாம் என்றும் ஜெயகுமார் தெரிவித்தார்.