கேரளாவில் ஓணம் பண்டிகை வெகுவிமர்சையாக 10 நாட்கள் கொண்டாடபட்டு வருகிறது. இதை அடுத்து கேரள எல்லையை ஒட்டியுள்ள குமரி மாவட்டத்தில், மலையாள மக்கள் அதிகம் வசித்து வரும் பகுதிகளில் ஓணம் பண்டிகை கொண்டாடபடுவது வழக்கம். எனினும், கொரோனா நோய் தொற்று ஊரடங்கால், கடந்த இரண்டு ஆண்டுகள் ஓணம் பண்டிகை கேரளாவை போல் குமரியிலும் களையிழந்து காணபட்டது. இந்நிலையில் இந்த ஆண்டு குமரி மாவட்டத்தில் ஓணம் பண்டிகை களைகட்ட துவங்கி, இன்று திருவோணம் பண்டிகையை மக்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஓணம் பண்டிகை கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக மீனச்சல், குழித்துறை, ஆற்றுர் உள்ளிட்ட பகுதிகளில் மலையாள மொழி மக்களின் கலாசார நிகழ்ச்சிகளான மோகினியாட்டம், திருவாதிரைகளி, வள்ளங்களி, தெய்யம் , சிங்காரி மேளம் ஆகிய நிகழ்ச்சிகள் மற்றும் ஊர்வலங்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. மாவேலி மன்னர் வேடம் பூண்டு வீடு வீடாக மக்களுக்கு ஓணம் வாழ்த்துக்கள் கூறி மகிழ்விக்கும் ஊர்வலன்களும் நடைபெற்று வருகிறது. 


மேலும் படிக்க | கன்னி ராசியில் வக்ரமடையும் புதன்; மகத்தான வெற்றிகளை அடைய உள்ள '4' ராசிகள்!


இதே போல் கோவில்கள் , பொது இடங்கள், வீடுகளில் அத்தப்பூ போட்டியும் நடைபெற்றது. மேலும் மதியம் ஓண சத்திய என்ற அறுசுவை உணவு குடும்பங்கள் ஒன்றிணைந்து சாப்பிடுவதும் முக்கியமான நிகழ்வாக வீடுகளில் நடைபெறும். மேலும் கொரோனா நோய் தொற்றால் இரண்டு ஆண்டுகள் ஓணம் பண்டிகை முடங்கிய நிலையில், இந்த வருடம் ஓணம்பண்டிகை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். குமரி மாவட்டத்திற்கு திருவோணம் பண்டிகையை முன்னிட்டு இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


பேட்டி : சூர்யா - குழித்துறை


மேலும் படிக்க | Astro: பல தலைமுறைக்கான செல்வத்தை அள்ளித்தரும் கஜகேசரி யோகம்; பலன் பெறும் ராசி இது தான்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ