சென்னை நிறுவன சொட்டு மருந்தால் அமெரிக்காவில் ஒருவர் பலி... பலருக்கும் பறிபோனது பார்வை
EzriCare Eye Drop Issue: சென்னை அருகே உள்ள குளோபல் பார்மா ஹெல்த்கேர் என்ற நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட EzriCare என்ற கண் சொட்டு மருந்தால் அமெரிக்காவில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
EzriCare Eye Drop Issue: சென்னையை சேர்ந்த மருந்து நிறுவனம் ஒன்றின் கண் சொட்டு மருந்தின் தயாரிப்பை அமெரிக்க சந்தையில் நிறுத்திவைப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த மருந்தில், மருந்து-எதிர்ப்பு பாக்டீரியாவால் மாசுப்பாடு அடைந்திருப்பதாக அந்நாட்டின் சுகாதார பாதுகாப்பு முகமை தெரிவித்தது. இந்த மாசுபாட்டால், சிலர் நிரந்தரமாக பார்வையை இழந்திருப்பதாகவும், ரத்த ஓட்டத்தில் ஏற்பட்ட தொற்று காரணமாக ஒருவர் மரணம் அடைந்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய மருந்துகள் நிலையான கட்டுப்பாட்டு அமைப்பு குழுவினரும், மாநில அரசின் மருந்து கட்டுப்பாட்டாளரும், சென்னைக்கு தெற்கே 40 கி.மீ., தொலைவில் அமைந்துள்ள குளோபல் பார்மா ஹெல்த்கேர் தொழிற்சாலைக்கு விரைந்தனர்.
குளோபல் பார்மா ஹெல்த்கேர் (Global Pharma Healthcare) தயாரித்த EzriCare என்ற செயற்கை கண்ணீரை வரவழைக்கும் கண் சொட்டு மருந்துகளின் திறக்கப்படாத பாட்டில்களை நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான அமெரிக்க மையம் (CDC) சோதித்து வருகிறது. மேலும், இந்த நிறுவனம் தயாரித்த பொருள்களின் இறக்குமதியை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA) தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க | விஷமாக மாறிய இந்திய இருமல் மருந்து... 18 குழந்தைகள் பலி!
பாக்டீரியா தொற்று மாசுபாட்டின் காரணமாக EzriCare செயற்கைக் கண்ணீர் அல்லது Delsam Pharma's Artificial Tears போன்றவற்றை வாங்க வேண்டாம் என்றும் அதன் பயன்பாட்டை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம், நுகர்வோர் மற்றும் சுகாதாரப் பணியாளர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அசுத்தமான செயற்கை கண்ணீரைப் பயன்படுத்துவது கண் நோய்த்தொற்றுகளின் அபாயத்தை அதிகரிக்கிறது. இது கண்பார்வையை நிரந்தரமாக இழக்கச் செய்யும் அல்லது மரணத்தை விளைவிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, குளோபல் பார்மா ஹெல்த்கேர் நிறுவனம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. "காலவதியாகாமல் இருக்கும் EzriCare, LLC மற்றும் Delsam Pharma ஆகிய செயற்கை கண்ணீர் லூப்ரிகன்ட், கண் சொட்டு மருந்துகள் என அனைத்து பொருட்களையும் தானாக முன்வந்து திரும்பப் பெறுகிறது" என குறிப்பிட்டுள்ளது. தொற்று மாசுப்பாட்டினால், நுகர்வோர் மட்டத்திலும் மருந்தை திரும்ப பெறுவதாக தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் 10க்கும் மேற்பட்ட மாநிலங்களில் குறைந்தது 55 பேரை பாதித்த (சூடோமோனாஸ் ஏருகினோசா) pseudomonas aeruginosa என்றழைக்கப்படும் பாக்டீரியாவின் பரவலால் நாடு முழுவதும் உள்ள மருத்துவர்கள் எச்சரிக்கப்பட்டுள்ளனர். இதனால், அமெரிக்காவில் ஒருவர் மரணமடைந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இதுவரை, கண்களில் நேரடியாக நோய்த்தொற்று ஏற்பட்ட 11 நோயாளிகளில் குறைந்தது ஐந்து பேர் பார்வையை இழந்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சூடோமோனாஸ் ஏருகினோசா இரத்தம், நுரையீரல் அல்லது காயங்களில் நோய்த்தொற்றுகளை ஏற்படுத்தலாம். சமீப காலங்களில் ஆன்டிபயாடிக் எதிர்ப்பு காரணமாக கிருமிக்கு சிகிச்சையளிப்பது கடினமாக உள்ளது என தெரிவிக்கப்படுகிறது.
பொதுவாக வாழும் இடத்தில், அசுத்தமான நீர் அல்லது மண்ணால் பாதிகப்படும்போது போது, மருத்துவமனைகள் அல்லது பிற சுகாதார அமைப்புகளில் உள்ளவர்களுக்கு பாக்டீரியா பொதுவாக பரவுவது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | அச்சமூட்டூம் குழந்தை திருமணம்... 1800க்கும் அதிகமானோர் கைது
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ