குற்றச்சாட்டு கூறுவதால் ஒருவர் குற்றவாளியாகிவிட முடியாது -EPS
குற்றச்சாட்டு கூறுவதால் ஒருவர் குற்றவாளியாகிவிட முடியாது; குற்றத்தை நிரூபிக்க வேண்டும் என அமைச்சர் விஜயபாஸ்கர் குறித்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்....!
குற்றச்சாட்டு கூறுவதால் ஒருவர் குற்றவாளியாகிவிட முடியாது; குற்றத்தை நிரூபிக்க வேண்டும் என அமைச்சர் விஜயபாஸ்கர் குறித்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்....!
குட்கா ஊழல் தொடர்பான வழக்குகள் அனைத்தும் சிபிஐ-க்கு மாற்றப்பட்ட நிலையில், கடந்த செப்டம்பர் 5 ஆம் தேதி சிபிஐ அதிகாரிகள் தங்களது சோதனையைத் தொடங்கினர். குட்கா அதிபர் மாதவராவின் வீட்டில் கிடைத்த டைரியின் அடிப்படையில் சோதனை நடைபெற்று வந்தது. முதல்கட்டமாக, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி ராஜேந்திரன், முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் ஆகியோரின் வீடு, அலுவலகம் உள்ளிட்ட 35-க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை நடைபெற்றது.
இதில், ஜார்ஜ் வீட்டில் மட்டும் 2 வது நாளாக சோதனை நடைபெற்றது. இரண்டு நாட்களாக நடைபெற்ற இந்த சோதனையில் ஏராளமான ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, குட்கா விற்பனையில் ரூ.60 கோடி வரை சட்டவிரோத பணபரிமாற்றம் நடந்துள்ளது என வழக்குப்பதிவு செய்து அமலாக்கத்துறையும்தனது விசாரணையைத் தொடங்கியுள்ளது.
இந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்ட மாதவராவ் உள்ளிட்ட 5 பேரையும், சிபிஐ காவலில் வைத்து விசாரிக்க அதிகாரிகள் கோரிக்கை வைத்தனர். அதன்படி, மாதவராவ் உள்ளிட்ட 5 பேரையும் 4 நாள் சிபிஐ காவலில் எடுத்து விசாரிக்க சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையடுத்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சேலத்தில் இன்று செயதியாளர்களை சந்தித்தார். அப்போது இது குறித்து அவர் பேசியபோது., குற்றச்சாட்டு கூறுவதால் ஒருவர் குற்றவாளியாகிவிட முடியாது; குற்றத்தை நிரூபிக்க வேண்டும் என அமைச்சர் விஜயபாஸ்கர் குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு முதல்வர் பழனிசாமி பதில் கொடுத்தார்.
மேலும், அவர் பெட்ரோல் டீசல் மீதான மதிப்பு கூட்டு வரியை மத்திய அரசு தான் குறைக்க வேண்டும். வாட் வரியை குறைப்பது பற்றி தமிழக அரசு பரிசீலிக்கும். வரியை மத்திய அரசுதான் உயர்த்திக்கொண்டே செல்கிறது.
மேகதாது விஷயத்தில் தமிழக அரசின் முடிவு தெளிவாக உள்ளது. மேகதாதுவில் எக்காரணத்தைக் கொண்டும் அணை கட்டக்கூடாது. அணை கட்டுவதற்கு மத்திய அரசு அனுமதி அளிக்கக் கூடாது.
தமிழக அரசின் எந்த துறையிலும் தவறு நடந்ததாக புகார் வரவில்லை. ஓட்டுக்குப் பணம் கொடுப்பதாக வெளியான தகவல் தவறானது. ஓட்டுக்கு பணம் கொடுப்பதும் குற்றம், வாங்குவதும் குற்றம். அப்படிப்பட்ட நிலையில் அதிமுக இல்லை என தெரிவித்துள்ளார்.