மேட்டூர் அணையில் நீர் வெளியேறும் அளவு ஒரு லட்சத்து 30 ஆயிரம் ஆகா உயர்வு!
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து ஒரு லட்சத்து 30 ஆயிரம் கன அடியாக உள்ள நிலையில் நீர் வெளியேற்றமும் தொடர்ந்து ஒரு லட்சத்து 30 ஆயிரம் கன அடியாக உள்ளது.
கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக, ஒகேனக்கல் காவிரி யில் நீர்வரத்து 1.15 லட்சம் கனஅடியாக உள்ளது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1.30 லட்சம் கன அடியாக அதிகரித்துள்ளது. கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும், கேரள மாநிலம் வயநாட்டிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, கர்நாடக கபினி கிருஷ்ணசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இரு அணைகளும் நிரம்பி உள்ளதால், பாதுகாப்பு கருதி உபரிநீர் காவிரியில் திறக்கப்பட்டுள்ளது. மேலும் மாநில எல்லை பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால், காவிரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
ஒகேனக்கல் காவிரியில் நேற்று முன்தினம் 1.35 லட்சம் கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை 1.15 லட்சம் கனஅடியாக சரிந்துள்ளது. இதனால் அங்குள்ள மெயின் அருவி, சினிபால்ஸ், ஐவர்பாணி உள்ளிட்ட பகுதிகளை மூழ்கடித்து தண்ணீர் பாய்ந்து செல்கிறது. ஆற்றில் குளிக்கவும் பரிசல் இயக்கவும் தடை நீடிக்கிறது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து ஒரு லட்சத்து 30 ஆயிரம் உள்ளதால் அணைக்கு வரும் உபரி நீர் அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது.
மேலும் படிக்க | கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியே வந்த 75 வயது மூதாட்டி!
அணை நீர்மின் நிலையம் வழியாக 23 ஆயிரம் கண்ணாடியும் 16 கண் மதகுகள் வழியாக 1,07,000 திறக்கப்பட்டுள்ளதால் காவிரி கரையோர மக்களுக்கு தொடர்ந்து வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர்மட்டம் 120 நீடிக்கிறது, நீர் இருப்பு 93.47 டி.எம். சி.யாகவும் உள்ளது. கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 400 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
மேலும் படிக்க | சேலம் அரசு மருத்துவமனையில் போலி மருத்துவர்கள் !!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ