சென்னையில் ஒரு கிலோ சின்ன வெங்காயத்தின் விலை ரூ.200 ஐ நெருங்கி உள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சுவை கூட்டும் காய்கறியாக சாப்பாட்டு வகைகளில் வெங்காயம் சேர்க்கப்படுகிறது. தற்போது இந்த வெங்காயத்தின் விலை நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டே செல்கிறது. விலை ஏற்றம் அடைந்துள்ளதால் சில ஓட்டல்களில் வெங்காயத்தை அதிகமாக சேர்த்து செய்யப்படும் உணவு வகைகளுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.


சென்னையில் பெரிய வெங்காயத்தின் விலை ரூ.100 முதல் 130 வரையிலும், சின்ன வெங்காயத்தின் விலை ரூ.140 முதல் 180 வரையிலும் விற்கப்படுகிறது. தமிழகத்திற்கு  ஆந்திரா, கர்நாடகா மற்றும் நாசிக் பகுதிகளில் இருந்து வெங்காயம் வருகிறது. வழக்கமாக 100 லாரிகளில் 20 டன் வெங்காயம் வரும் நிலையில் தற்போது 35 லாரிகளில் மட்டுமே வெங்காயம் வந்து கொண்டிருக்கிறது. 


இந்நிலையில் தற்போது சென்னையில் ஒரு கிலோ சின்ன வெங்காயத்தின் விலை ரூ.200 ஐ நெருங்கி வருவதால், பொது மக்களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.