ஆன்லைன் டிரேடிங் மோசடி மூலமாக 2லட்சம் ரூபாயை இழந்த நபர்
பெண் ஒருவர் ஆன்லைனில் முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் ஈட்டித் தருவதாக கூறிய ஆசை வார்த்தையை நம்பி 2 லட்சத்து 52 ஆயிரம் ரூபாயை இழந்த நபர்.
பெண் ஒருவர் ஆன்லைனில் முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் ஈட்டித் தருவதாக கூறிய ஆசை வார்த்தையை நம்பி 2 லட்சத்து 52 ஆயிரம் ரூபாயை தாம் இழந்து விட்டதாக மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உள்ள எம்.சுப்புலாபுரத்தைச் சேர்ந்த மாற்றுத் திறனாளி இளைஞர் ராம்குமார் என்பவர் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.
அதில் அவர் :
“கடந்த 2.5 ஆண்டுகளுக்கு முன்பு பணியில் இருந்தபோது மின்சாரம் தாக்கி இரு கைகளையும் இழந்தேன். கடந்த 1 ஆண்டுக்கு முன்னர் எனது உறவினர் மூலம் தூத்துக்குடி மாவட்டம் கடம்பூரைச் சேர்ந்த பிரவீனா என்ற பெண் அறிமுகம் ஆனார். அவர், ஆன் லைனில் ட்ரேடிங் செய்வதாகவும், பணம் கொடுத்தால் பன்மடங்காக திருப்பி தருவதாகவும் என்னிடம் கூறினார்.
ALSO READ : COVID-19 Update: இன்று 1,580 பேர் கொரோனாவால் பாதிப்பு மற்றும் 22 பேர் உயிரிழப்பு
இதனால் 2 லட்சத்து 52 ஆயிரம் ரூபாயை அவரிடம் வழங்கினேன், துவக்கத்தில் 36 ஆயிரம் ரூபாயை பிரவீனா வழங்கினார். பின்னர் பணம் வழங்கவில்லை, பிரவீனாவிடம் பணத்தை திருப்பி கேட்டபோது என் மீது கடம்பூர் காவல் நிலையத்தில் கந்துவட்டி கேட்டு மிரட்டுவதாக கொடுத்த புகாரின் அடிப்படையில் என் மீதும், என் உறவினர் மீதும் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதனால் நானும், என் குடும்பத்தாரும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளோம், ஆகவே என்னுடைய பணத்தை திரும்பப் பெற்றுத் தருவதோடு பிரவீனா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்”
இவ்வாறு அவர் அந்த மனுவில் கூறியுள்ளார்.
ALSO READ : வாரத்திற்கு 50 லட்சம் தடுப்பூசிகள் - தமிழகம் இலக்கு
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.