Men Only: ஆண்கள் மட்டும் பங்கேற்ற பாரம்பரிய அசைவ பந்தி திருவிழா
ஆண்களுக்கு மட்டுமே அனுமதி! மதுரையின் ஸ்பெஷல் கிடா விருந்து கலாச்சாரம்...
மதுரை: மதுரை மாவட்டம் திருமங்கலத்தை கரும்பாறை முத்தையா கோவில் கிடா விருந்து விசேஷமானது. ஆண்டுதோறும் மார்கழி மாதம் நடைபெறும் இந்த விருந்தில், பெண்களுக்கு அனுமதி கிடையாது. சிறு குழந்தைகள் முதல் வயதான பெண்கள் என பெண்கள் யாருக்குமே அனுமதி கிடையாது.
நூறு ஆண்டுகளுக்கும் மேலாக இப்பகுதி மக்கள் கோலாகலமாக கிடா விருந்து வழங்கி வருகின்றனர். மக்கள் நேர்த்திக்கடனாக நூற்றுக்கணக்கான ஆடுகள் மற்றும் கோழிகள் கோவிலுக்கு நேர்த்திகடனாக செலுத்தி வருவது வழக்கம்.
மார்கழி மாதம் வருடத்தின் ஆங்கில முதல் தேதியன்று கரும்பாறை முத்தையா கோவிலில் (Traditional Prayer) நேர்த்திக்கடனாக விடப்பட்ட ஆடு கோழிகளை சுவாமிக்கு பலியிடப்பட்டு உணவு தயாரித்து பொங்கல் வைத்து வெகுவிமர்சையாக சுவாமிக்கு பூஜை செய்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்குவார்கள்.
இங்கு நேர்த்திக் கடனாக விடப்பட்ட ஆடுகளும் கோழிகளும் விவசாய நிலங்களில் பயிரை மேய்ந்தால் கரும்பாறை முத்தையா சுவாமிகள் உணவு எடுத்துக் கொள்வதாக இப்பகுதி மக்களின் நம்பிக்கை.
இதனால் இப்பகுதியில் விலங்குகள் விவசாய நிலங்கள் பயிர்களை சேதப்படுத்திநாளும் இப்பகுதிமக்கள் கவலைப்படுவதும் இல்லை. இதனால் எங்களுக்கு விமோசனம் என்று இப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
ஆண்கள் மட்டுமே கலந்துக் கொள்ளும் இந்த விழாவில் திருமங்கலம், பொண்ணமங்கலம், கரடிக்கல், மாவிலிபட்டி, செக்கானூரணி, வடக்கம்பட்டி ,மேல உரப்பனூர், கீழஉரப்பனூர், ஆலங்குளம், சித்தாளை, புங்கங்குளம், கருமாத்தூர், மாவிலிபட்டி ஆகிய பகுதி ஆண்கள் கலந்துக் கொள்வார்கள்.
நேற்று நடைபெற்ற கிடா திருவிழா வழக்கம்போல பிரம்மாண்டான அளவில் கொண்டாடப்பட்டது. நூற்றுக்கணக்கான அரிசிகள் மூட்டைகள் மற்றும் ஆடுகளும் கோழிகளும் பலியிடப்பட்டன.
ஆயிரக்கணக்கான ஆண்கள் பூஜைகளை செய்து வழிபட்டனர். ஏராளமாக ஒன்றிணைந்து பந்தியில் அமர்ந்து ஒன்றாக உணவு உண்டார்கள்.
பிறகு, ஐந்து ஏக்கர் நிலத்தில் இலைபோட்டு அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்தப் பந்தி முடிந்தபின் அங்கு சாப்பிட்ட இலைகள் காயும் வரை பெண்கள் யாரும் அப்பகுதி கோவிலுக்கு செல்லக்கூடாது என்பதும் ஐதீகம். அதன்படி அப்பகுதி பெண்களும் கரும்பாறை முத்தையா சுவாமி கோவிலுக்கு செல்லாமல் இருந்தனர்.
கொரோனா கட்டுப்பாடுகள் இருந்தபோதிலும், ஆண்களுக்கான பிரத்யேக திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது.
Also Read | ராம பக்தன் அனுமானின் பிறந்தநாள் இன்று!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.
Android Link: https://bit.ly/3hDyh4G
Apple Link: https://apple.co/3loQYeR