டெல்லியில் நடப்பது தான் மக்கள் நல அரசு. தமிழகத்தில் வீடு தேடி சென்று லஞ்சம் வாங்கும் சேவை மட்டும் தான் நடைமுறையில் உள்ளது என பாமக நிறுவனர் ராமதாசு அவர்கள் குற்றம்சாட்டியுள்ளார்!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு., பிறப்பு, இறப்பு, சாதி, திருமணச் சான்றிதழ், ஓட்டுனர் உரிமம், புதிய குடிநீர் இணைப்பு உள்பட 40 வகை சேவைகளுக்கு இணையம் மூலம் விண்ணப்பித்தால் வீடு தேடி வந்து வழங்கப்படும் என அறிவித்துள்ளது


இத்திட்டமானது டெல்லியில் இன்று முதல் அமலுக்கு வருவதாகவும், இச்சேவைகளுக்கு கூடுதலாக 50 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மொபைல் சஹாயக் (Mobile Sahayaks) என்று பெயர் சூட்டப்பட்டுள்ள இந்த திட்டம் ஊழலுக்கு முடிவு கட்டுவதுடன், அரசு நிர்வாகத்தை துரிதகதியில் செயல்பட வைக்கும் எனவும் டெல்லி முதல்வர் கெஜிரிவால் தெரிவித்துள்ளார்.


இத்திட்டத்திற்கு இந்தியா முழுவதிலும் உள்ள அரசியல் தலைவர்கள் பாராட்டுகள் தெரிவித்து வரும் நிலையில் பாஜக நிறுவனர் ச.ராமதாசு அவர்கள் இத்திட்டத்தினை மேற்கொள் காட்டி தமிழக அரசினை சாடியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது...



"ஓட்டுனர் உரிமம், குடிநீர் இணைப்பு உள்ளிட்ட 40 சேவைகளை வீடு தேடி சென்று வழங்கும் திட்டம் தில்லியில் அறிமுகம்: செய்தி - இது தான் மக்கள் நல அரசு. தமிழகத்தில் வீடு தேடி சென்று லஞ்சம் வாங்கும் சேவை மட்டும் தான் நடைமுறையில் உள்ளது!" என குறிப்பிட்டுள்ளார்!