சென்னை: கடந்த செப்டம்பர் இறுதியில் தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் பொறியியல் கல்லூரிகளில் மாணவர்களுக்கான இறுதி செமஸ்டர் தேர்வு (Final Semester Exam) நடைபெற்றது. கொரோனா அச்சம் மற்றும் இணையக்கோளாறு காரணமாக பல மாணவர்கள் தேர்வு எழுத முடியவில்லை. எனவே இறுதி தேர்வு எழுதாமல் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு வரும் 17 முதல் 21ஆம் தேதி வரை தேர்வு நடத்தப்படும் எனவும், இந்த தேர்வுகள் ஆன்லைன் (Online Exam) மூலம் நடைபெறும் எனவும் அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இணையக்கோளாறு காரணமாக தேர்வு எழுத முடியாத மாணவர்கள் முந்தைய தேர்வுகள் அடிப்படையில் மதிப்பெண் வழங்கப்பட வேண்டும் அல்லது மீண்டும் தேர்வு நடத்த வேண்டும் எனக்கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து பல்கலைக்கழக மானியக் குழு சார்பில், முந்தைய தேர்வுகள் அடிப்படையில் மதிப்பெண் வழங்க முடியாது. இறுதி செமஸ்டர் தேர்வுகள் மீண்டும் நடத்துவோம் என தெரிவித்திருந்தது. 


ALSO READ |  Anna University-க்கு உயர் சிறப்பு தகுதி தேவையில்லை; சிறந்த இடத்தில் தான் இருக்கிறோம்: அமைச்சர்



இந்தநிலையில், இறுதி செமஸ்டர் தேர்வு எழுத முடியாமல் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு வரும் 17 முதல் 21 ஆம் தேதி வரை ஆன்லைன் மூலம் தேர்வு நடத்தப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் (Anna University) அறிவித்துள்ளது.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR