சென்னை : தமிழத்தில் மீண்டும் லாட்டரி சீட்டை கொண்டு வந்து நாட்டை சுடுகாடாக ஆக்க வேண்டாம் என தமிழக அரசுக்கு எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒரு உன்னத நோக்கத்தோடு ஆரம்பிக்கப்பட்ட லாட்டரி சீட்டு திட்டத்தில்‌ திரு. கருணாநிதி அவர்கள்‌ தமிழ்‌நாட்டின்‌ முதலமைச்சராக இருந்தபோது, தனியாரை நுழைய அனுமதித்து லாட்டரி சீட்டு திட்டத்தை‌ சிரழித்தார்‌. அப்போது வெளி மாநில லாட்டரிகள்‌ தமிழ்‌ நாட்டில்‌ அனுமதிக்கப்பட்டு, ஒரு சீட்டின்‌ விலை 10 ரூபாய்‌ என்றும்‌, பரிசு ஒரு கோடி ரூபாய்‌ என்றும்‌ மக்களிடையே பேராசை தூண்டப்பட்டது. 


இதன்‌ காரணமாக, சீட்டாட்டம்‌ , குதிரை ரேஸ்‌ போல‌ லாட்டரி சீட்டு தமிழகத்தில்‌ மாபெரும்‌ சூதாட்டமாக மாறியது. தனியார்‌ லாட்டரி ஏஜெண்ட்டுகள்‌, வெளி மாநில லாட்டரி சீட்டுக்களை, கள்ள நோட்டு அச்சடிப்பது போல்‌ அச்சிட்டு மக்களிடம்‌ விற்றார்கள்‌. உடனடியாக கோடீஸ்வரர்கள்‌ ஆகலாம்‌ என்ற ஆசை வார்த்தைகளை நம்பிய அப்பாவி ஏழை, எளிய மக்கள்‌, லாட்டரி மயக்கத்தில்‌ தங்கள்‌ குடும்பத்தையும்‌, வாழ்வையும்‌ இழந்தார்கள்‌.  தனியார்‌ லாட்டரியால்‌ பணம்‌ இழந்த பல அப்பாவிகள்‌ தற்கொலை செய்துகொண்ட அவலமும்‌ நிகழ்ந்தது.


ALSO READ:ஆக்சிஜன் பற்றாக்குறை குறித்த உண்மையை முதல்வர் விளக்க வேண்டும் : ஓ.பன்னீர்செல்வம்


பின்ன்னர், மாண்புமிகு புரட்சித்‌ தலைவி அம்மா அவர்கள்‌ இரண்டாவது முறையாக 2001-ல்‌ ஆட்சி அமைத்த பின்‌, லாட்டரி கொள்ளையரின்‌ பிடியில்‌ இருந்து மக்களைக்‌ காக்க முடிவு செய்தார்கள்‌. அதன்படி, 2003-ஆம்‌ ஆண்டு ஜனவரி மாதம்‌ அரசு கொள்கை முடிவு எடுத்து, ஒரே கையெழுத்தில்‌, ஒரே இரவில்‌ லாட்டரி சீட்டை தமிழகத்தில்‌ ஒழித்த பெருமை மாண்புமிகு அம்மா அவர்களையே சாரும்‌. இந்தச்‌ சட்டத்திற்கு எதிராக லாட்டரி கொள்ளையர்கள்‌ உச்சநீதிமன்றம்‌ வரை வழக்கு தொடர்ந்து தோல்வியைச்‌ சந்தித்தார்கள்‌.


 ஏழை, எளிய மக்கள்‌, பல ஆண்டுகளாக லாட்டரி அரக்கனின்‌ பிடியில்‌ இருந்து தப்பி நல்வாழ்வு வாழ்ந்து வருகிறார்கள்‌. இந்நிலையில்‌, மக்களின்‌ தலையில்‌ மண்ணை வாரிக்கொட்ட, சந்தர்ப்பவசத்தால்‌ தற்போது பதவியில்‌ அமர்ந்துள்ள திமுக-வின்‌ விடியா அரசு முடிவு செய்துள்ளதாகத்‌ தகவல்கள்‌ வருகின்றன. ஆட்சிக்கு வருவதற்கு முன்‌, அரசுக்கு வருவாயைப்‌ பெருக்கும்‌ வழி எங்களுக்குத்‌ தெரியும்‌ என்று கொக்கரித்த இவர்கள்‌, லாட்டரி சீட்டை மீண்டும்‌ கொண்டு வந்து நாட்டை ௬டுகாடாக்க முடிவு செய்துள்ளது மிகவும்‌ கண்டிக்கத்தக்கது.


தனியார்‌ லாட்டரி ஏஜெண்ட்டுகள்‌ கொள்ளை அடிக்கவும்‌, அதன்மூலம்‌ ஆட்சியாளர்கள்‌ பெருத்த ஆதாயம்‌ பெறுவதற்குமான, இந்த அதிகாரப்பூர்வ லாட்டரி சீட்டு திட்டத்தை தி.மு.க. அரசு கைவிட வேண்டும்‌. அரசின்‌ வருவாயைப்‌ பெருக்க வேறு பல நல்ல வழிகளைத்‌ தேட வேண்டும்‌.


ALSO READ:பிளஸ் 2 துணைத் தேர்வுக்கு விண்ணப்ப பதிவு தொடங்கியது


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR