ஆக்சிஜன் பற்றாக்குறை குறித்த உண்மையை முதல்வர் விளக்க வேண்டும் : ஓ.பன்னீர்செல்வம்

ஆக்சிஜன் பற்றாக்குறை குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறிய தகவலும், சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்த தகவலும் முற்றிலும் மாறுப்பட்டுள்ள நிலையில், இதில் எது உண்மை என முதல்வர் விளக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்திருக்கிறார்.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Jul 23, 2021, 09:06 AM IST
  • தமிழக முதல்வர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதையும் குடும்ப நலத்துறை அமைச்சர் பேட்டியையும் ஒப்பிட்டுப் பார்த்தால் முரண்பாடு தெள்ளத் தெளிவாகிறது.
  • முதல்வர் ஸ்டாலின் இது குறித்து உடனடியாக ஆராய்ந்து உண்மை நிலையை தமிழ்நாட்டு மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும்
ஆக்சிஜன் பற்றாக்குறை குறித்த உண்மையை முதல்வர் விளக்க வேண்டும் : ஓ.பன்னீர்செல்வம் title=

ஆக்சிஜன் பற்றாக்குறை குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறிய தகவலுக்கும், சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்த தகவலும் முற்றிலும் மாறுப்பட்டுள்ள நிலையில், இதில் எது உண்மை என முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்க வேண்டும் என அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில்,  கொரோனா வைரஸ்  தொற்று இரண்டாம் அலை உச்சத்தில் இருந்த போது ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஒருவர் கூட உயிர் இழக்கவில்லை என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் தெரிவித்திருப்பது முழு பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல் உள்ளது எனக் கூறியுள்ளார்.
 
இது குறித்து மேலும் கூறுகையில், ‘ஒரு செய்தியை பத்திரிகையாளர்களிடம் தெரிவிக்கின்ற உரிமை அமைச்சருக்கு உண்டு அதை நான் மறுக்கவில்லை ஆனால் அந்த செய்தியில் உண்மை இருக்கிறதா என்பதை ஆராய வேண்டிய கடமை எதிர்க்கட்சிக்கு உண்டு.சட்டமன்ற பொதுத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றதை அடுத்து மே 7 அன்று ஸ்டாலின் தமிழ்நாட்டின் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்ற அன்றைய தினமே  பிரதமருக்கு ஆக்சிஜன் பற்றாக்குறை குறித்து ஒரு கடிதத்தை ஸ்டாலின் (M.K.Stalin) எழுதினார்.

Also Read | Corona ஏற்பட்ட பிறகு ஆன்டிபாடிகள் எத்தனை நாள் உங்கள் உடலை பாதுகாக்கும்?

அந்த கடிதத்தில் தமிழ்நாடு ஆக்சிஜன் நெருக்கடியில் சிக்கி தவிப்பதாகவும் ஆக்சிஜன் பற்றாக்குறையால் இரண்டு நாட்களுக்கு முன்பு செங்கல்பட்டில் 13 பேர் எதிர்ப்பாராத விதமாக இறந்து இருக்கிறார்கள் என்றும் குறிப்பிட்டிருக்கிறார். தமிழக முதல்வர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதையும் குடும்ப நலத்துறை அமைச்சர் பேட்டியையும் ஒப்பிட்டுப் பார்த்தால் முரண்பாடு தெள்ளத் தெளிவாகிறது.

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்  பிரதமருக்கு கடிதம் வாயிலாக தெரிவித்த கருத்து உண்மையா? அல்லது மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் பேட்டி மூலம் தெரிவித்தாரே அந்தத் தகவல் உண்மையா என்பதை விளக்க வேண்டிய கடமை தமிழக அரசுக்கு உண்டு. முதல்வர் ஸ்டாலின் இது குறித்து உடனடியாக ஆராய்ந்து உண்மை நிலையை தமிழ்நாட்டு மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என கூறியுள்ளார்.

Also Read | ஜூலை 22: இன்று தமிழகத்தில் 1872 பேருக்கு கொரோனா பாதிப்பு

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News