திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஜனாதிபதியை சந்தித்தனர்
சட்டசபையில் நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்த வலியுறுத்தி திமுகவினர் இன்று டெல்லியில், ஜனாதிபதியை சந்தித்து முறையிட்டார்.
திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் ஜனாதிபதியை இன்று சந்தித்துள்ளனர். ஓபிஎஸ் இபிஎஸ் அணிகள் இணைந்த பின்னர், டிடிவி தினகரன் தலைமையிலான அணியினர் தனியாக செயல்பட்டு வருகின்றனர்.
மேலும் அரசுக்கு தங்கள் ஆதரவை வாபஸ் பெறுவதாக கூறி, முதலமைச்சர் பழனிச்சானியை நீக்க வலியுறுத்தி, ஆளுநர் வித்யாசாகர் ராவிடம் டிடிவி தரப்பு எம்.எல்.ஏக்கள் மனு அளித்தனர்.
இதனால் பெரும்பான்மையை நிரூபிக்க உடனே உத்தரவிட வேண்டும் என்று ஆளுநரிடம் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.
இந்நிலையில் டெல்லியில் திமுக, காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பிக்கள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்துள்ளனர். அந்த சந்திப்பில், சட்டசபையைக் கூட்டி முதல்வரை நம்பிக்கை வாக்கு கோர ஆளுநரை வலியுறுத்த வேண்டும் என்று குடியரசுத் தலைவரை கேட்டுக்கொண்டுள்ளனர். இதில், கனிமொழி, டிகேஎஸ் இளங்கோவன், திருச்சி சிவா, ஆர்எஸ் பாரதி, டி. ராஜா, சீதாராம் யெச்சூரி, காங்கிரஸின் ஆனந்த் சர்மா ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.