நகர்புற உள்ளாட்சித் தேர்தலில் தமிழகம் முழுவதும் அதிமுக படுதோல்வியை சந்தித்துள்ள நிலையில், தேனி மாவட்டம் பெரியகுளத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் அதிமுக கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். கைலாசப்பட்டியில் உள்ள அவரது பண்ணை வீட்டில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அதிமுக நகர மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | அரசியல் பழிவாங்குதலுக்காக காவல்துறை பயன்படுத்தபடுகிறது - எடப்பாடி பழனிச்சாமி!


அதிமுக மாவட்ட செயலாளர் சையது கான் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுக தோல்வி குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது, ஓ.பன்னீர்செல்வத்திடம் பேசிய அதிமுக நிர்வாகிகள், அதிமுக தோல்விக்கு அமமுக காரணம் எனத் தெரிவித்துள்ளனர். அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை மீண்டும் அதிமுகவில் நிபந்தனையின்றி சேர்த்துக் கொண்டால் கட்சி வெற்றி பெறும் என்றும் அதிமுக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து தீர்மானம் ஒன்றை நிறைவேற்றியுள்ள அதிமுகவினர், வரும் 5 ஆம் தேதி முறைப்படி தேனி மாவட்ட செயல் வீரர்கள் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளனர்.


 


அதில் முறைப்படி அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை நிபந்தனையின்றி மீண்டும் அதிமுகவில் சேர்க்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது. குறிப்பாக, சசிகலா மற்றும் டிடிவி தினகரனை கட்சியில் சேர்க்க வேண்டும் என அதிமுக நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இதனை மனதில் வைத்த இத்தகைய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவு அதிமுக வட்டாரத்தில் சலசலப்பை உருவாக்கியுள்ளது. கடந்த சில நாட்களாக எடப்பாடி மற்றும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு இடையே புகைச்சல் அதிகரித்து வந்த நிலையில், பன்னீர் செல்வத்தின் இந்த முடிவு எடப்பாடி தரப்புக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.


மேலும் படிக்க | TTV தூண்டுதலில் EPS, OPS மீது கொலை முயற்சி - புகார்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR