அதிமுக (AIADMK) சட்டவிதிகளின்படி, 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை கட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தப்பட வேண்டும். அண்மையில் நடைபெற்ற அக்கட்சியின் செயற்குழு கூட்டத்தில் இதுதொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. அப்போது, அதிமுகவின் அடிப்படை விதிகளில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, பொதுச்செயலாளர் பதவிக்கான அதிகாரங்கள் அனைத்தும், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு கொடுக்கப்பட்டது. மேலும், அவர்களை தொண்டர்களே நேரடியாக தேர்வு செய்யும் வகையிலும் விதிகள் திருத்தியமைக்கப்பட்டது. செயற்குழு முடிவுக்குப் பின்னர் டிசம்பர் 7 ஆம் அதிமுக உட்கட்சி தேர்தல் நடைபெறும் என்றும், அதன் முடிவுகள் டிசம்பர் 8 ஆம் தேதி அறிவிக்கப்படும் என அதிமுக அறிவித்தது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ALSO READ | சசியம்மா முதல்வராக பதவியேற்பது உறுதி- சொல்லுவது பொன்னையன்


அதிமுகவின் உட்கட்சி தேர்தலுக்கு தேர்தல் ஆணையர்களாக முன்னாள் அமைச்சர் பொன்னையன் மற்றும் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் நியமிக்கப்பட்டனர். இந்நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமைக் கழகத்தில், தேர்தல் ஆணையாளர்கள் பொன்னையன் மற்றும் பொள்ளாச்சி ஜெயராமன் முன்னிலையில் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கான வேட்புமனுத் தாக்கல் நேற்று தொடங்கியது. பிரசாத் சிங் என்ற அதிமுக தொண்டர், முதன்முதலாக ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தார். அவரை அதிமுகவினர் அடித்து விரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது. 2ம் நாளான இன்று, அதிமுகவின் தற்காலி அவைத் தலைவர் தமிழ்மகன் உசேன் முன்னிலையில், ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு கூட்டாக வேட்பு மனுத்தாக்கல் செய்தனர். 


ALSO READ | அதிமுக புதிய பொதுச்செயலாளர் விரைவில் தேர்வு- பொன்னையன்


இருவரின் வேட்புமனுக்களையும் தேர்தல் ஆணையாளர்கள் பொன்னையன் மற்றும் பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். இந்த நிகழ்வின்போது அதிமுகவின் மூத்த நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர். வேட்புமனு தாக்கல் செய்ய, சனிக்கிழமை மதியம் 3 மணி வரை மட்டுமே காலவகாசம் கொடுக்கப்பட்டுள்ள நிலையில், அதுவரை யாரும் வேட்பு மனுத்தாக்கல் செய்யவில்லை என்றால் ஓ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ் போட்டியின்றி தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR