ஜெய்ஹிந்த் எனக்கூறி பதவியேற்ற ஓபிஎஸ் மகன்!! வரவேற்றனர் பாஜகவினர்!!
அனைவரும் `தமிழ் வாழ்க` கோசத்துடன் பதவியேற்ப்பு; ஆனால் தேனி எம்.பி. ரவீந்திரநாத் குமார் மட்டும் `ஜெய்ஹிந்த்` என்ற கோசத்துடன் பதவியேற்றார்.
புது டெல்லி: 17-வது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. இந்தக் கூட்டத்தொடர் ஜூலை 26 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தொடரில் அனைத்து எம்.பிக்களுக்கு தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார் பதவி பிராமணம் செய்து வைத்தார்.
முதல் நாள் கூட்டத்தில் வாரணாசி தொகுதியில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற பிரதமர் நரேந்திர மோடி வாரணாசியின் நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்றுக்கொண்டார். அதேபோல காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி வயநாடு மக்களவை தொகுதி எம்.பி-யாக பதவியேற்றுக் கொண்டார். நேற்று மட்டும் 23 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 313 எம்பிக்கள் நேற்று பதவியேற்றுக் கொண்டனர்.
இந்தநிலையில் தமிழகம் உட்பட மீதமுள்ள மாநிலங்களை சேர்ந்த எம்.பி-க்கள் இன்று பதவியேற்றுக் கொண்டனர். அந்தவகையில் தமிழ் நாட்டில் இருந்து நாடாளுமன்ற மக்களவைக்கு புதியதாக தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.கள் தமிழில் உறுதிமொழி ஏற்றனர். சிலர் "தமிழ் வாழ்க", சிலர் "தமிழ் வாழ்க" "பெரியார் வாழ்க" சிலர் "காமராஜர் வாழ்க" மற்றும் அதிமுக எம்பி "வாழ்க எம்ஜிஆர்" வாழ்க ஜெயலலிதா" எனக்கூறி பதவியேற்றுக் கொண்டனர்.
அந்த சமயத்தில், தமிழகத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஒரே அதிமுக எம்.பி. ஆனா ஓபி ரவீந்திரநாத் குமார் பதவியேற்ற போது, "வாழ்க புரட்சித் தலைவர் எம்ஜிஆர்" "வாழ்க புரட்சித் தலைவி அம்மா" வந்தே மாதரம், ஜெய்ஹிந்த் எனக் கூறி பதவியேற்றுக் கொண்டார். இதை அங்கிருந்த பாஜக எம்பிக்கள் வரவேற்றனர்.