ஓபிஎஸ் அணியினர் தாமாக முன்வந்தால் பேச்சுவார்த்தை நடத்துவோம் என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கூறியுள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஓ.பன்னீர்செல்வம் தனது ட்விட்டர் பக்கத்தில், இரு அணிகளும் இணைவது குறித்து யாராவது அணுகினால் நிபந்தனையின்றி கலந்து பேசத்தயார் என குறிப்பிட்டு இருந்தார்.


இந்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சென்னையில் இன்று சந்தித்த பிறகு தம்பிதுரை  செய்தியாளர்களிடம் கூறியதாவது:


எல்லோரும் சேர்ந்து செயல்பட வேண்டும் என்று ஓபிஎஸ் கூறியிருப்பது வரவேற்கத்தக்கது. அதற்காக பேச்சுவார்த்தை நடத்துவதில் தவறில்லை. பிரிந்து சென்ற ஓபிஎஸ் அணியினர் தாமாக முன்வந்தால் பேச்சுவார்த்தை நடத்தத் தயார். கருத்து வேறுபாடுகளை சரி செய்து ஆட்சியை தக்கவைப்பதே தங்களது குறிக்கோள்.


இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது தற்காலிகமாகத்தான். நிரந்தரமாக அல்ல. இரட்டை இலை சின்னம் எங்களுக்கே கிடைக்கும். தொகுதிப் பிரச்சினை குறித்துப் பேசவே முதல்வர் பழனிசாமியை சந்தித்தேன்.