முதல்வா் எடப்பாடி பழனிசாமியை மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையோடு துணைமுதல்வர் ஓ.பன்னீா் செல்வம் தன்னை சந்திக்க முற்பட்டதாக அமமுக துணைப்பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இன்று தனது இல்லத்தில் செய்தியாளா்களை சந்தித்த டிடிவி தினகரன் கூறியதாவது, கடந்த ஆண்டு ஜுலை 12 ஆம் நாள் துணைமுதல்வர் ஓ.பன்னீா் செல்வம் என்னை சந்தித்தார் என்பது உண்மை தான். சந்திப்புக்கு சுமார் 10 நாட்களுக்கு முன்பே நண்பர் ஒருவர் மூலம் ஓ.பன்னீா் செல்வம் எனக்கு தூதுவிட்டார். இது தொடர்பாக எனது கட்சி நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்திய பின்பு ஓ. பன்னீா் செல்வத்தை நேரில் சந்தித்தேன். அவருடன் அவரது மகன் மற்றும் சகோதரர் கூட இருந்தனர்.


அந்த சந்திப்பின் போது, எடப்பாடி பழனிசாமியுடன் இணைந்து செயல்படுவது தவறு தான். உங்களுக்கு எதிராக நான் சென்றிருக்கக் கூடாது. எடப்பாடி பழனிசாமியை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று கூறினார். இவ்வாறு அமமுக துணைப்பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.


ஏற்கனவே, டிடிவி தினகரனை சந்திப்பு குறித்து தமிழக துணைமுதல்வா் ஓ.பன்னீா் செல்வம் மறுப்பு தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.