துணை முதல்வராகிறாரா ஓ.பி.எஸ்?
தமிழகத்தில் ஆளும் அ.தி.மு.க தினம் ஒரு பரபரப்பு செய்தியினை மக்களுக்கு அளித்து வருகிறது.
அந்த வகையில் இன்று காலை பிரிந்துள்ள அ.தி.மு.க-வின் இரண்டு அணிகளையும் இணைப்பது குறித்து பேசுவதற்காக அ.தி.மு.க தலைமையகத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வந்துள்ளார். உடன் முக்கிய அமைச்சர்கள் சிலரும் வந்துள்ளனர்.
இந்த பேச்சுவார்த்தையில் இரு அணிகளும் இணைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடைபெறும் எனவும், ஓ.பி.எஸ். அணியினர் தரப்பில் வைக்கப்பட்ட நிபந்தனைகள் குறித்து ஆலோசனை நடத்த இருபதாகவும் தெரிகிறது.
இரு அணிகளும் இணைந்தால் ஓ.பி.எஸ் துணை முதல்வர் பதவியை வகிப்பார் எனவும், அவரது அணிச்சேர்ந்த இரண்டு பேருக்கு அமைச்சர் பதவி வழங்க முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தயாராக உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்த கூட்டத்தில் டி.டி.வி தினகரன் அணியைச் சேர்ந்த நிர்வாகிகளும் பங்கேற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் தங்கள் தரப்பு நிபந்தனைகளை முதல்வரிடம் முன்வைக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.