திமுகவுக்கு ஆஸ்கார் விருது : ஜெயகுமார் அறிவிப்பு..!
பொய் வழக்குப் போடுவதில் திமுக ஆஸ்கார் விருதுக்கு தகுதியானது என முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் விமர்சித்துள்ளார்
அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் நில அபகரிப்பு உள்ளிட்ட 3 வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தார். சமீபத்தில் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்த அவர், ராயபுரத்தில் உள்ள காவல்நிலையத்தில் நாள்தோறும் கையெழுத்திட்டு வருகிறார். இன்று அங்கு கையெழுத்திட வந்த அவரிடம் செய்தியாளர்கள் வழக்கு குறித்து கேள்வி எழுப்பினர். அப்போது பேசிய அவர், திமுக அரசு ஆட்சிப் பொறுப்பு ஏற்றதில் இருந்து எதிர்கட்சிகளை எப்படி முடக்க வேண்டும் என்பதில் குறியாக உள்ளது என்று குற்றம் சாட்டினார்.
அது மட்டுமின்றி அதிமுகவை சேர்ந்த பெரும் தலைவர்களை பழிவாங்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் உள்ள திமுக தொடர்ந்து பொய் வழக்குகளை போட்டுவருவதாகவும் கூறினார். தொடர்ந்து பேசிய ஜெயகுமார் திமுகவினரின் இந்த நடவடிக்கை மனித உரிமை மீறல் எனவும், இதனால் இது குறித்து மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
இதுபோன்ற அத்துமீறிய அவர்களின் செயலுக்கு கட்டாயம் திமுகவினர் பதிலளித்தேயாக வேண்டும் என அறிவுறுத்திய ஜெயகுமார், பொய் வழக்கு என்பதால்தான் நிபந்தனை ஜாமீனில் வெளியே வர முடிந்தது எனவும் கூறினார்.தொடர்ந்து பேசிய அவர் முதலமைச்சர் மு.க ஸ்டாலினின் துபாய் பயணத்திற்காக மக்களின் பணம் வீனடிக்கப்பட்டுள்ளது எனவும் தேவையில்லாமல் பலரையும் அங்கு அழைத்து சென்றதாகவும் அவர் விமர்சித்தார்.
மேலும் படிக்க | மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்துவதே பாஜகவின் எண்ணம் - சீத்தாராம் யெச்சூரி!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR