மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்துவதே பாஜகவின் எண்ணம் - சீத்தாராம் யெச்சூரி!

மத்திய பாஜக அரசு மாநிலங்களின் கலாச்சார பண்பாட்டை அழித்து ஒற்றை கலாச்சாரத்தை புகுத்த முயல்வதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி விமர்சித்துள்ளார். 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 30, 2022, 05:14 PM IST
  • மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23-வது மாநில மாநாடு
  • மதுரையில் இன்று முதல் ஏப்ரல் 1-ம் தேதி வரை நடைபெறுகிறது
  • மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி உரை
மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்துவதே பாஜகவின் எண்ணம்  -  சீத்தாராம் யெச்சூரி! title=

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23-வது மாநில மாநாடு மதுரையில் இன்று முதல் ஏப்ரல் 1-ம் தேதி வரை 3 நாட்கள் நடைபெறுகிறது. இதன் தொடக்க நிகழ்ச்சியாக கொடியேற்றத்துடன் மாநாடு தொடங்கியது. மாநாட்டில் சி.பி.எம் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மதுரை எம்.பி. சு.வெங்கடேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

மாநாட்டில் உரையாற்றிய சீதாராம் யெச்சூரி பேசுகையில் “நாடு முழுவதும் இந்துத்துவ கொள்கையை அமலாக்க பாஜக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. நாடாளுமன்றத்தில் மக்கள் பிரச்னைகள் குறித்து விவாதம் செய்ய முடியவில்லை. நடுநிலையோடு செயல்பட வேண்டிய தேர்தல் ஆணையம் ஆளும் அரசுக்கு ஆதரவாக செயல்படுகிறது. சி.பி.ஐ மற்றும் அமலாக்கத்துறை பாஜகவின் எதிரிகளை அச்சுறுத்த பயன்படுத்தப்பட்டு வருகிறது. நாட்டின் பொதுத்துறையை கார்ப்பரேட்டுகளுக்கு விற்க முயல்கின்றனர். கார்ப்பரேட்டுகள் நாட்டின் செல்வங்களை கொள்ளையடிக்கின்றனர்.

Yechuri

நாட்டின் அடிப்படை ஜனநாயக அம்சமான சி.ஏ.ஏ., காஷ்மீர் வழக்குகள் போன்றவை நீதிமன்றத்தில் நீண்ட காலமாக கிடப்பில் போடப்பட்டுள்ளன. நாட்டின் அடிப்படை அமைப்புகள் தகர்க்கப்பட்டு தாக்குதலுக்குள்ளாகியுள்ளன. சுதந்திர போராட்டத்தின் மூலம் பெற்ற பல்வேறு உரிமைகள் பறிக்கப்படுகின்றன. நாட்டின் அடிப்படையான 4 தூண்களை பாஜக தகர்த்து எறிய முயல்கிறது. நாட்டின் பன்முக கலாச்சார, மொழிகளை காக்கும் அரசியல் சட்டத்தை மாற்றி இந்தியாவை ஒற்றை நாடாக மாற்ற மத்திய அரசு முயல்கிறது. 

இந்துத்துவாவை மட்டுமே முன்னிலைப்படுத்தும் மத்திய அரசு நாட்டின் விலைவாசி, வேலையின்மை குறித்து பேசுவதில்லை. நாட்டை மத ரீதியாக பிரிக்கும் நோக்கில் சிறுபான்மை மக்களுக்கு எதிராக இந்து மக்களை இணைக்க முயல்கின்றனர். இஸ்லாமியர்கள் மீது வெறுப்புணர்வை புகுத்தி தாக்குதல் நடத்தப்படும் வேலையில் மக்களின் பிரச்னைகளை மறைக்க இந்துத்துவா கொள்கைகள் பயன்படுத்தப்படுகிறது. காஷ்மீரில் பண்டிட்களுக்கு எதிரான தீவிரவாத தாக்குதலில் 89 காஷ்மீர் பண்டிட்கள் கொல்லப்பட்டதாக ராணுவ தகவல் உள்ள நிலையில் 1600 இஸ்லாமியர்களும் கொல்லப்பட்டனர். இதனை மறைத்து அதிகளவில் இந்துக்கள் கொல்லப்பட்டதாக காஷ்மீர் பைல்ஸ் திரைப்படத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க | ராமாயணம், மகாபாரதத்தை இழிவுபடுத்தியதாக சீதாராம் யெச்சூரி மீது வழக்கு!

CPM

காஷ்மீர் பைல்ஸ் படத்தை பார்க்காதவர்கள் தேச பக்தி அற்றவர்கள் என எனும் பிரச்சாரம் முன்னெடுக்கப்படுகிறது. சாதி ரீதியான அடுக்குகளை நியாயப்படுத்த பள்ளி புத்தகங்களில் பகவத் கீதை முன்னிலைப்படுத்தப்படுகிறது. 
மேல் சமூகத்தில் பிறந்தவர்களுக்கு கீழ் சமூகத்தில் பிறந்தவர்கள் சேவை ஆற்ற வேண்டும் என்ற அடிப்படையில் தான் பகவத்கீதை போதனைகள் உள்ளன. சாதிய கட்டமைப்பை பாதுகாக்கும் வகையில் பகவத் கீதை உள்ளது. பெண் என்றால் தந்தை கணவனுக்கு பணியாற்றி குழந்தைகளை பாதுகாக்க வேண்டும் என பகவத்கீதை கூறுகிறது. எனவே, பகவத் கீதையை முன்னிறுத்தி பாஜகவின் கட்டமைப்பை கொண்டு செல்ல முயற்சி நடைபெறுகிறது. 

இந்த சூழலில் பாஜகவை வீழ்த்த இடதுசாரிகளால் மட்டுமே முடியும். இதனை பிரதமர் மோடியும் நன்றாக புரிந்து வைத்துள்ளதால் தான் பாஜக எம்.பி.க்களுடனான ஆலோசனைகளில் இடதுசாரிகள் குறித்து பேசி வருகிறார். 
2024-ம் ஆண்டு பொதுத்தேர்தலில் பாஜகவை வீழ்த்த இடதுசாரிகள் மற்றும் மதச்சார்ப்பற்ற அணிகள் ஒன்றிணைய வேண்டும்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க | காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இல்லை - சீதாராம் யெச்சூரி!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News