பிரதமர் மோடி, கடந்த 3 ஆண்டுகளில் மேற்கொண்ட வெளிநாட்டு பயணங்களின்போது தனி விமானத்துக்கு மட்டும், சுமார் 255 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளதாக தகவல்..!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கடந்த மூன்று ஆண்டுகளில் பிரதமர் நரேந்திர மோடியின் வெளிநாட்டு பயணங்களுக்கு பயன்படுத்தப்பட்ட தனி விமானங்களுக்கு ரூ .255 கோடிக்கு மேல் செலவு செய்யப்பட்டுள்ளதாக மாநிலங்களவை வியாழக்கிழமை தெரிவிக்கப்பட்டது. 


இது குறித்த எழுத்துப்பூர்வமான பதிலில், மத்திய வெளியுறவு துறை இணை அமைச்சர் முரளிதரன் மாநிலங்களவையில் அளித்த அறிக்கையில் இந்த தகவல் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, 2016-17 ஆம் ஆண்டு வரை பட்டய விமானங்களுக்கு ரூ .76.27 கோடி செலவிடப்பட்டதாகவும், 2017-18 ஆம் ஆண்டில் ரூ .99.32 கோடி செலவிடப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.


2017- 2018 காலக்கட்டத்தில் சுமார் 99 கோடி ரூபாயும், 2018-2019 காலக்கட்டத்தில் மட்டும் சுமார் 80 கோடி ரூபாயும் செலவிடப்பட்டுள்ளது. மொத்தமாக சேர்த்து  கடந்த 3 ஆண்டுகளில் மட்டும்  255 கோடி ரூபாய்க்கும் அதிகமான தொகை செலவிடப்பட்டுள்ளது.


உள்நாட்டு பயணத்திற்கான செய்யப்பட்ட செலவுகள் குறித்த கேள்விக்கு அவர், "VVIP மற்றும் VIP-க்கள் IAF விமானம் / ஹெலிகாப்டர்களைப் பயன்படுத்துவது தொடர்பான இந்திய அரசின் கொள்கையின்படி, பிரதமருக்கு IAF விமானங்களில் இலவச விமானம் மற்றும் உத்தியோகபூர்வ சுற்றுப்பயணங்களில் ஹெலிகாப்டர்கள் உரிமை உண்டு" என்று கூறினார்.