புதுச்சேரியில், ரவுடிகளை கட்டுப்படுத்த வணிகர்கள், ரோந்து குழுவை ஏற்படுத்த வேண்டுமென துணைநிலை ஆளுநர் கிரண்பேடி அறிவுறுத்தல்!!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

அண்மையில், புதுச்சேரி வில்லியனூர் பகுதியில் உள்ள மளிகை கடையில், ரவுடி சாந்த குமார் என்பவன் நுழைந்து, பணம் கேட்டு மிரட்டியுள்ளான். இதனையறிந்து அங்கு சென்ற காவலரையும் தாக்கி தப்பித்த அவன் மீது, பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.


இந்தநிலையில், வலைதளத்தில் இதுகுறித்து பதிவிட்ட துணைநிலை ஆளுநர் கிரண்பேடி, காவலரை தாக்கியவர் யார், காவல் ஆவணங்களில் ரவுடியின் பெயர் இல்லையா? என கேள்வி எழுப்பினார். ரவுடிகளை கண்காணிக்கவும், கட்டுபடுத்தவும் வணிகர்கள் ஒன்று சேர்ந்து தங்கள் சொந்த முயற்சியில் ரோந்து குழு ஒன்றை ஏற்படுத்த வேண்டும் என கோரிய அவர், வியாபார இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை பொருத்தி அவற்றை முழு செயல்பாட்டில் வைக்கவும், ரோந்து போலீசாருடன் இணைந்து செயல்பட வேண்டும் அறிவுறுத்தியுள்ளார்.