வருமான வரித்துறையிடம் சரமாரி கேள்வி கேட்கும் ப.சிதம்பரம்...
வருமான வரித்துறைக்கு எப்படி எதிர்கட்சி தலைவர்களைப் பற்றி மட்டுமே துப்பு கிடைக்கிறது? என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்!
வருமான வரித்துறைக்கு எப்படி எதிர்கட்சி தலைவர்களைப் பற்றி மட்டுமே துப்பு கிடைக்கிறது? என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்!
மக்களவை தேர்தல் நாடுமுழுவதும் ஏழு கட்டங்களாக நடைபெறுகிறது. அதன்படி கடந்த 11-ஆம் தேதி முதல்கட்ட தேர்தல் நடைப்பெற்றுத. இரண்டாம் கட்டமாக, தமிழகம் உட்பட 12 மாநிலங்களில் நாளை தேர்தல் நடைபெற உள்ளது.
எதிர்வரும் தேர்தலை ஜனநாயக முறையில் நடத்திட தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் சட்டவிரோதமான பண பறிமாற்றம் ஏதும் நிகழாமல் இருக்க தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. எனினும் அவ்வப்போது தமிகத்தின் தொகுதிகளில் பதிக்கி வைக்கப்பட்டுள்ள பணங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருவதாக தேர்தல் ஆணையம் அறிவித்து வருகிறது.
அந்த வகையில் நேற்றயை தினம் தூத்துக்குடியில் கனிமொழி தங்கியிருந்த வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. இந்த சோதனை தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பி உள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளதாவது... வருமான வரித்துறை கார்த்தி சிதம்பரத்தின் மீது கொடுத்த புகார் சட்ட விரோதமானது, செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அந்த வழக்கில் வருமான வரித்துறை மேல் முறையீடு செய்திருக்கிறது. அவ்வளவுதான், இந்த மேல்முறையீட்டில் கார்த்தியின் வழக்கறிஞர்கள் பதில் சொல்வார்கள்.
திருமதி கனிமொழியின் இருப்பிடத்தில் வருமான வரி சோதனை, எதுவும் கிடைக்கவில்லை என்பது செய்தி. அது எப்படி, எதிர்க்கட்சித் தலைவர்களைப் பற்றி மட்டுமே 'துப்பு' கிடைக்கிறது?!
2019 தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தலின் அடையாளமே வருமான வரித் துறையின் எதேச்சாதிகார பாரபட்சமான நடவடிக்கைகளே" என குறிப்பிட்டுள்ளார்.